LCUவுக்கு போட்டியாக ஒரு சினிமாட்டிக் யுனிவர்ஸ்? திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த ராஷ்மிகா!
Author: Prasad19 August 2025, 2:12 pm
Maddock Horror Comedy Universe
தமிழில் லோகேஷ் கனகராஜ் LCU என்ற சினிமாட்டிக் யுனிவர்ஸை தொடங்கினாரோ அதற்கு முன்னமே பாலிவுட்டில் “Maddock” ஹாரர் காமெடி யுனிவர்ஸ் தொடங்கிவிட்டது. Maddock என்ற பட தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகி வரும் இத்திரைப்படங்கள் ஹாரர் காமெடி வகையை சேர்ந்தவை.
2018 ஆம் ஆண்டு இந்த Maddock யுனிவர்ஸில் முதன்முதலில் “ஸ்திரி” என்ற திரைப்படம் வெளிவந்தது. அதனை தொடர்ந்து இந்த யுனிவர்ஸில் “பேடியா”, “மூஞ்சியா”, “ஸ்திரி 2” போன்ற திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. இவை அனைத்தும் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படங்கள் ஆகும். அந்த வகையில் தற்போது இந்த யுனிவர்ஸில் “தாமா” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

சினிமாட்டிக் யுனிவர்ஸில் இணைந்த ராஷ்மிகா
இந்த நிலையில் “தாமா” திரைப்படத்தின் மூலம் Maddock யுனிவர்ஸில் இணைந்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. “தாமா” திரைப்படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா, ராஷ்மிகா மந்தனா, நவாஸுத்தின் சித்திக் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஒரு Vampire திரைப்படமாகும். இந்த நிலையில் “தாமா” திரைப்படத்தின் அட்டகாசமான டீசர் தற்போது வெளிவந்துள்ளது.
இதில் ராஷ்மிகா மந்தனா வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். ராஷ்மிகா நடிக்கும் முதல் ஹாரர் திரைப்படம் இது. இத்திரைப்படத்தை ஆதித்யா சர்போட்தர் என்பவர் இயக்கி வருகிறார். இத்திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.
Maddock யுனிவர்ஸின் வரிசையில் “தாமா” திரைப்படத்தை தொடர்ந்து “சக்தி ஷாலினி”, “பேடியா 2”, “சாமுண்டா”, “ஸ்திரி 3”, “மகா மூஞ்சியா”, “பெஹ்லா மகாயுத்” போன்ற திரைப்படங்கள் உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
