சினிமாவுக்கு Good Bye? புதிய தொழிலை தொடங்கிய ராஷ்மிகா மந்தனா? இதை எதிர்பார்க்கவே இல்லை!
Author: Prasad22 July 2025, 11:01 am
பேன் இந்திய நடிகை
கன்னடத்தில் “கிரிக் பார்ட்டி” என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அதனை தொடர்ந்து கன்னடத்தில் சில திரைப்படங்களிலும் தெலுங்கில் சில திரைப்படங்களிலும் நடித்து வந்த அவருக்கு “கீதா கோவிந்தம்” திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அதனை தொடர்ந்து தமிழ், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடிக்கத் தொடங்கினார். தற்போது ஹிந்தியில் “தாமா” என்ற திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் ராஷ்மிகா மந்தனா ஒரு புதிய தொழில் ஒன்றை தொடங்கியுள்ளது ரசிகர்கள் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

இது என்னுள் ஒரு பகுதி…
அதாவது ராஷ்மிகா மந்தனா Dear Diary என்ற Perfume நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ள ராஷ்மிகா மந்தனா, “இது உண்மையில் எனது மனதிற்கு நெருக்கமானது, இது வெறும் பிராண்டோ அல்லது பெர்ஃப்யூமோ மட்டுமல்ல, இது என்னுள் ஒரு பகுதி” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த Perfume-ஐ ஆன்லைனில் ஆடர் செய்வதற்கான ஒரு Website-ஐயும் அவர் தொடங்கியுள்ளார். அதன் Link-ஐ தனது Instagram பக்கத்தின் Bio-ல் இணைத்துள்ளார். ஒரு பக்கம் சினிமாவில் நடித்துக்கொண்டே மறுபக்கம் தனது Perfume தொழிலையும் நடத்த முடிவு செய்துள்ளார்.
