கா*** கைவிட்டு வீடியோ எடுத்த கேமராமேன் – அதிர்ந்துப்போன ராஷ்மிகா!

Author:
10 October 2024, 4:12 pm

பிரபல நடிகையான ராஷ்மிகா மந்தனா தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் முதன்முதலில் கன்னடத்தில் வெளிவான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகினார்.

rashmika

அதன் பிறகு தெலுங்கில் சாலோ திரைப்படத்தின் மூலமாக என்ட்ரி கொடுத்தார். தமிழ் சினிமாவில் முதன் முதலில் சுல்தான் திரைப்படத்தின் மூலமாக நேரடியாக ஹீரோயினானது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு முன்னதாக வெளிவந்த டியர் காம்ரேட், கீதா கோவிந்தம் உள்ளிட்ட திரைப்படங்களில் மூலமாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து அங்கும் தொடர்ச்சியாக அடுத்த அடுத்த திரைப்படங்களில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். கடைசியாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்கள்: விஜய் சேதுபதிக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்ததே நான் தான்… ? வனிதா பேச்சால் கடுப்பான ரசிகர்கள்!

தொடர்ந்து அடுத்தடுத்து திரைப்படங்களை கைவசம் வைத்துக்கொண்டு இந்திய சினிமாவில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு காரில் ஏறி சென்றபோது போட்டோகிராபர் அவருடைய காருக்குள்ளே கேமரா வைத்து படம் பிடித்தனர்.

அதை பார்த்து ராஷ்மிகா மந்தனா அதிர்ந்து போய்விட்டார். அந்த அதிர்ச்சியான நேரத்திலும் ராஷ்மிகா மந்தனா கியூட்டான ரியாக்ஷன் கொடுத்த அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?