தளபதி 65: விஜய்க்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Author: Udhayakumar Raman
26 March 2021, 8:59 pm
Quick Share


தளபதி65 படத்தில் விஜய்க்கு 2ஆவது ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.

விஜய் நடிப்பில் திரைக்கு வந்த மாஸ்டர் படம் வெளியாகி 50 நாட்களை கடந்துவிட்டது. உலகம் முழுவதும் வெளியான மாஸ்டர் படம் ரூ.250 கோடி வரையில் வசூல் குவித்துள்ளது. மாஸ்டர் படத்தின் மாபெரும் பிளாக் பஸ்டர் ஹிட்டைத் தொடர்ந்து விஜய், தளபதி65 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

டாக்டர் படத்தைத் தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் – அனிருத் கூட்டணி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. இந்த நிலையில், தளபதி65 படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நடிக்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக தளபதி65 படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார் என்று அதன் டுவிட்டர் பக்கத்தில் பலமுறை தகவல் வெளியானது.

அதோடு, இந்தப் படத்திற்காக அவருக்கு ரூ.3.5 கோடி வரையில் சம்பளமும் பேசப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டது. தற்போது அவர் தான் ஹீரோயினாக நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ரூ.3.5 கோடி வரையில் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கும் என்பதும் உண்மை என்று பேசப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் திரைக்கு வந்த முகமூடி படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்தப் படத்தில் அவருக்கு அவ்வளவு காட்சிகள் இல்லை.

இதனால், தான் என்னவோ, அவரது பெயர் அப்படி ஒன்றும் பேசப்படவில்லை. தளபதி65 படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருக்கிறார். இதே போன்று, குக் வித் கோமாளி புகழ், பூவையார், வித்யுத் ஜம்வால் மற்றும் நவாசுதீன் சித்திக் ஆகியோரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தப் படத்தில் விஜய்க்கு 2ஆவது ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வருகிறது.

‘ஏற்கனவே பூஜா ஹெக்டே அல்லது ராஷ்மிகா மந்தனா என்று இருவரது பெயரும் அடிபட்டது. இந்த நிலையில்தான், பூஜா ஹெக்டே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். இந்தப் படத்திற்கு அன்பறிவு ஸ்டண்ட் மாஸ்டர்களாக பணியாற்றுகின்றனர். நண்பன் படத்தைத் தொடர்ந்து தளபதி65 படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். தொடர்ந்து, வரும் ஏப்ரல் மாதம் ரஷ்யாவில் தளபதி65 படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Views: - 75

0

0