சில்க்கை நினைத்து தான் அந்த பாட்டுக்கு ஆடினேன் : போட்டோவை வெளியிட்டு ரகசியத்தை உடைத்த ராஷ்மிகா!!
Author: Udayachandran RadhaKrishnan30 October 2021, 4:27 pm
எத்தனையோ படங்கள் வந்தாலும் ஒரு சில நடிகைகள்தான் மக்கள் மனதில் பதியப்படுகிறார்கள். அந்த வகையில் சீக்கிரமாக ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தவர்தான் ராஷ்மிகா மந்தனா.
ஆரம்பத்தில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர், பின்னர் கன்னடம், தமிழ் என படுபிசியாக நடித்து வருகிறார். கீதா கோவிந்தம் படத்தின் மூலம் அழகு தேவதையாக வலம் ராஷ்மிகா, தற்போது கிளாமர் ரோலில் நடித்து வருகிறார்.
கிளாமர் ரோலில் நடிக்க மாட்டார் என ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், முன்னணி நடிகர்களுக்காக கிளாமர் ரூட்டுக்கு மாறியுள்ளார். தமிழில் சுல்தான் படம் மூலம் அறிமுகமான இவர், தெலுங்கு, கன்னட மொழிகளில் படுபிசியாக உள்ளார்.
தற்போது அவர் நடிப்பில் வெளியாகவுள்ள மிகவும் பிரம்மாண்டமாக தயாரிப்பில் உருவாகியுள்ள புஷ்பா படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விலை மாதுவாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியான சாமி, சாமி பாடல் தெலுங்கு, தமிழ் உட்பட 4 மொழிகளில் பட்டையை கிளப்பி வருகிறது. விலை மாதுவாக நடிப்பதால் கிளாமருக்கு பஞ்சமிருக்காது என்பதை போல இந்த பாட்டியில் வெறும் பாவாடிடை, ஜாக்கெட் மட்டும் அணிந்து நடித்துள்ளார்.
மேலும் தனக்கு சில்க் ஸ்மிதாவை ரொம்ப பிடிக்கும் என்றும், அவருடைய நடிப்பும் அழகான பேச்சும் ரொம்பவே பிடிக்கும் என கூறியுள்ளார். அதனால்தான் என்னவே சில்க்கை போல கவர்ச்சியை அள்ளித்தெளித்திருக்கிறார். நிச்சயமாக புஷ்பா படத்திற்கு பின் நிறைய வாய்ப்புகள் வரும் என கூறுகின்றனர்.
0
0