இது எல்லாத்துக்குமே காரணம் கெனீஷாதான்? எமோஷனல் ஆன ரவி மோகன்! ஓஹோ இதான் விஷயமா?
Author: Prasad26 August 2025, 7:04 pm
ரவி மோகன் ஸ்டூடியோஸ்
கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிவகார்த்திகேயன், கார்த்தி, சிவராஜ்குமார், ஷ்ரதா ஸ்ரீநாத் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மேலும் ரவி மோகனின் தோழியான கெனீஷாவும் கலந்துகொண்டார்.
ரவி மோகன் ஸ்டூடியோஸ் சார்பாக நடிகர் ரவி மோகன் தொடக்கத்திலேயே 10 திரைப்படங்களுக்கான பிராஜெக்ட்டை தயார் படுத்தி வருகிறார். மேலும் இதில் ரவி மோகன் யோகி பாபுவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவும் உள்ளார். இவ்வாறு தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரிக்கவுள்ளார்.

கெனீஷாதான் காரணம்!
இந்த நிலையில் விழா மேடையில் பேசிய ரவி மோகன், “இந்த விழா நடக்கிறது என்றால் அதற்கு முழுக்க முழுக்க காரணம் கெனீஷா மட்டும்தான். இந்த மொத்த விழாவும் அவர் எனக்காகவே நடத்தினார். எனக்கு யாரும் அப்படி செய்ததே கிடையாது. கெனீஷாவுக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
ஒரு மனுஷன் என்ன செய்றதுனு தெரியாம திணறிப்போய் நிக்கும்போது கடவுள் ஒரு விஷயம் அனுப்புவாரு. அது காசாக இருக்கலாம், பொருளாக இருக்கலாம். எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். அப்படி எனக்கு கடவுள் கொடுத்த Gift தான் கெனீஷா. நான் யார் என்று உணர வைத்தது அவுங்கதான். ரவி மோகன் ஸ்டூடியோஸின் ஒரு பங்கு அவர். இந்த ஸ்டூடியோஸின் பார்ட்னர் அவர்” என மிகவும் Emotional ஆக பேசினார்.

ஆர்த்தியுடனான பிரிவிற்கு பிறகு கெனீஷாவுடன் மிகவும் நெருக்கமாக பழகி வருகிறார் ரவி மோகன். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
