ஜோடியாக வந்த ரவி மோகனை பார்த்து கடுப்பான முன்னாள் மனைவி! காட்டமாக வெளியிட்ட பதிவு…

Author: Prasad
10 May 2025, 11:51 am

ஜோடியாக வந்த ரவி மோகன்

ரவி மோகனும் பிரபல தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகளான ஆர்த்தியும் காதலித்து வந்த நிலையில் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு இரண்டு குழந்தைகளும் உண்டு. ஆனால் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024 ஆம் ஆண்டு தங்களது விவாகரத்தை அறிவித்தனர். 

ravi mohan ex wife aarti ravi spoke about ravi mohan kenisha photos

இதனை தொடர்ந்து ரவி மோகன் கெனிஷா என்ற பாடகியை காதலித்து வருவதாக கிசுகிசுக்கள் கிளம்பின. ஆனால் இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ரவி மோகன், “நானும் அவரும் நட்பாகவே பழகி வருகிறோம்” என கூறினார். ஆனால் நேற்று ஐசரி கணேஷின் மகள் திருமண நிகழ்விற்கு கெனிஷாவுடன் ஜோடியாக வந்தார் ரவி மோகன். இவர்கள் ஜோடியாக கலந்துகொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் “ஒரு வேளை இருக்குமோ” என்பது போன்ற சந்தேகங்களை கிளப்பியது. ஆர்த்திக்கும் ரவி மோகனுக்கும் இடையே பிரிவு ஏற்பட்டத்தற்கு காரணமே ரவி மோகன் கெனிஷாவுடன் பழகி வந்ததுதான் என ஒரு பக்கம் கிசுகிசுக்கள் போய்க்கொண்டிருந்த நிலையில் இருவரும் ஜோடியாக கலந்துகொண்டது பல கேள்விகளை எழுப்பியது. 

கடுப்பான முன்னாள் மனைவி

இந்த நிலையில் ரவி மோகனின் முன்னாள் மனைவியான ஆர்த்தி, நேற்று தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் இது குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “ஒரு வருடமாகவே நான் எனது மௌனத்தை கவசம் போல் சுமந்து வந்தேன். நான் பலவீனமாக இருந்தேன் என்ற காரணத்திற்காக அல்ல, எனது மகன்களுக்கு அமைதி வேண்டும் என்பதற்காகவே. 

என மேல் எறியப்பட்ட அவதூறுகளையும் பழிகளையும் உள்வாங்கிக்கொண்டு அமைதியாக இருந்தேன். நான் எதுவும் பேசவில்லை, என்னிடம் உண்மை இல்லை என்ற காரணத்திற்காக அல்ல. எனது குழந்தைள் சுமையை தாங்ககூடாது வேண்டாம் என்பதற்காகத்தான். 

ravi mohan ex wife aarti ravi spoke about ravi mohan kenisha photos

இன்று வெளியான புகைப்படங்களின் தலைப்புகளை உலகம் கவனமாக பார்க்கையில் எங்கள் யதார்த்தம் வேறு மாதிரி என தோன்றியது. எனது விவாகரத்து வழக்கு தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் காதலிலும் விசுவாசத்திலும் நம்பிக்கையிலும் 18 வருடங்களாக நான் எந்த ஆணுக்காக துணை நின்றேனோ, அவர் என்னை மட்டும் விலகிச்செல்லவில்லை, எனக்கு சத்தியமளித்து கொடுக்கப்பட்ட பொறுப்புகளில் இருந்தும் விலகிச் சென்றுவிட்டார்” என கூறியுள்ளார்.

மேலும் அதில், “என்னுடைய குழந்தைகளுக்கு 10 மற்றும் 14 வயது ஆகிறது. அவர்களுக்கு பாதுகாப்புதான் வேண்டும், அதிர்ச்சி அல்ல. நிலைத்தன்மைதான் வேண்டும், அமைதி அல்ல” எனவும் கூறியுள்ளார். 

“நான் அழுக மாட்டேன். கத்த மாத்தேன். நான் உயர்ந்து நிற்பேன், ஏனென்றால் அப்படித்தான் இருந்தாக வேண்டும். உங்களை அப்பா என்று இன்றும் அழைத்துக்கொண்டிருக்கும் இரண்டு பசங்களுக்காக, நான் இனி வீழவே மாட்டேன்” என தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். 

  • ravi mohan and kenishaa francis first meeting story யார் இந்த கெனிஷா? இவருக்கும் ரவி மோகனுக்கும் பழக்கம் ஏற்பட்டது எப்படி? ஒரு குட்டி ஸ்டோரி…
  • Leave a Reply