ஒரு தடவ முட்டிட்டு விட்டா கொம்பு முளைக்கும்- Epic காட்சியை ரீகிரியேட் செய்த ரவி மோகன்-ஜெனிலியா!
Author: Prasad26 August 2025, 1:10 pm
ஒரு தடவ முட்டிட்டு விட்டா கொம்பு முளைக்கும்…
2008 ஆம் ஆண்டு ரவி மோகன், ஜெனிலியா ஆகியோரின் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “சந்தோஷ் சுப்ரமணியம்”. இத்திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தில் ஜெனிலியாவின் ஹாசினி என்ற கதாபாத்திரம் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்ட கதாபாத்திரமாக அமைந்தது.
தனது பெயரை சொல்லும்போது “ஹா ஹா ஹாசினி” என்று கொஞ்சலாக சொல்வது ரசிகர்களின் மத்தியில் மிக பிரபலமாக ஆனது. குறிப்பாக “ஒரு தடவ முட்டிட்டு விட்டா கொம்பு முளைக்கும்” என்று ரவி மோகனும் ஜெனிலியாவும் மீண்டும் முட்டிக்கொள்ளும் காட்சியை நம்மால் யாரும் மறந்திருக்க முடியாது. இவ்வாறு பல கியூட்டான விஷயங்கள் அத்திரைப்படத்தில் இடம்பெற்றிருந்தன.

மீண்டும் ரீகியேட் செய்த ரவி மோகன்-ஜெனிலியா
நடிகர் ரவி மோகன், தற்போது ரவி மோகன்” ஸ்டூடியோஸ் என்ற பெயரில் சொந்த தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ரவி மோகனுடன் பணியாற்றிய நடிகர், நடிகைகள், இயக்குனர் என பலரும் கலந்துகொண்டனர். மேலும் இதில் சிவராஜ்குமார், சிவகார்த்திகேயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் ரவி மோகனுடன் “சந்தோஷ் சுப்ரமணியம்” திரைப்படத்தில் நடித்த ஜெனிலியாவும் கலந்துகொண்டார்.
#RaviMohan & #Genelia recreating the iconic scene of SanthoshSubramaniam♥️😅 pic.twitter.com/EFR8MkJqCC
— Ayyappan (@Ayyappan_1504) August 26, 2025
அப்போது இருவரும் மேடையில் “சந்தோஷ் சுப்ரமணியம்” திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல காட்சியை ரீகிரியேட் செய்தனர். இது பலராலும் ரசிக்கப்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
