பார்ட்டி வைத்து முக்கிய அறிவிப்பு வெளியிட்ட ரவி மோகன் – கெனிஷா… திரைப் பிரபலங்கள் நேரில் வாழ்த்து!

Author: Udayachandran RadhaKrishnan
21 June 2025, 10:53 am

ரவி மோகன் விவகாரம் தான் தற்போது கோலிவுட்டில் செம ஹாட்டான் விவகாரம். மனைவி ஆர்த்தியை பிரிந்து வந்த ரவி மோகன் தற்போது பாடகி கெனிஷாவுடன் வசித்து வருகிறார்.

ரவி மோகன் தனது மனைவி மீது ஏராளமான புகாரை அள்ளி வீச, அதற்கு ஆர்த்தி மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வருகிறார். ஒரு புறம் இப்படி இருக்க, மறுபுறம் கெனிஷாவுடன் பொது இடங்களில் வெளியே வரும் ரவி மோகன், தாங்கள் நண்பர்கள் என விளக்கம் அளித்திருந்தார்.

Ravi Mohan and Kenishaa

இந்த நிலையில் கெனிஷா பாடிய அன்றும் இன்றும் என்ற ஆல்பம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த ஆல்பத்தில் ரவி மோகனும் தோன்றினார்.

இந்த ஆல்பம் ஹிட் அடித்ததால், நைட் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்து திரைப் பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்து விருந்து கொடுத்துள்ளனர்.

இதில் பங்கேற்ற நடிகர் மாதவன், இசையமைப்பாளர் டி இமான் உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • actress kayadu lohar increased his salary double இதுதான் சரியான தருணம்-சமயம் பார்த்து உஷாராக சம்பளத்தை ஏற்றிய கயாது லோஹர்!