அம்பிகாவும் நானும் ஒரே வீட்ல… Shooting Spot’ல கூட நடந்திருக்கு – நடிகர் ரவிகாந்த் பரபரப்பு பேட்டி!

Author:
3 August 2024, 7:20 pm
Quick Share

தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் பல்வேறு முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து நட்சத்திர நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் நடிகை அம்பிகா. தொடர்ச்சியாக பல வெற்றி படங்களில் நடித்ததன் மூலமாக புகழின் உச்சத்திற்கே சென்றார் நடிகை அம்பிகா.

ambika -updatenews360

இவர் 1998ல் பிரேம்குமார் என்ற நபரை திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அதன் பிறகு அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர். இதனிடையே அவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துவிட்டு தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள்.

அம்பிகா தனது மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறார். தற்போது சீரியல்களில் நடித்து வரும் நடிகை அம்பிகா கணவர் பிரேம்குமாரை விவாகரத்து செய்த பிறகு நடிகர் ரவிகாந்துடன் தொடர்ந்து காதல் கிசுகிசுக்கப்பட்டார். மேலும், இருவரும் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாக கூட செய்திகள் வெளியாகி பரபரப்பாக அப்போது பேசப்பட்டது.

இந்த நிலையில் அம்பிகாவுடனான கிசுகிசு செய்திகள் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் நடிகர் ரவிகாந்த் வதந்தி செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அது பற்றி பேசிய அவர் அம்பிகாவும் நானும் பல படங்களில் கணவன் மனைவியாக நடித்திருக்கிறோம். நாங்கள் இருவரும் பக்கத்து வீட்டில் இருந்ததால் ஒன்றாகவே படத்தின் சூட்டிங்கிற்கு செல்வோம்.

இருவரும் சேர்ந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கிறோம் என்றால் ஒன்றாகவே ஷூட்டிங்கிற்கு பைக்கில் சென்று வருவது என இருந்து வந்தோம். எங்களை இப்படி பார்த்ததால் பத்திரிக்கையாளர்கள் தவறான செய்திகளை எழுதி விட்டார்கள். எனவே இந்த கிசுகிசு செய்திகள் உண்மையை இல்லை . இதனால் அம்பிகா மிகவும் பாதிக்கப்பட்டார்.

அந்த பொண்ணு பாவம் கல்யாணம் பண்ணி அமெரிக்காவில் செட்டில் ஆகிட்டாங்க அவங்களோட கணவர் பிரேம்குமார் தான். ஆனால், பல பேர் ரவிகாந்த் தான் அம்பிகாவின் கணவர் என்று கூறினார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் நாங்கள் இருவரும் வந்து இறங்கிய உடனே…. இதோ புருஷன் பொண்டாட்டி வந்துட்டாங்க.. என்று கூறுவார்கள் .

நான் நிறைய நடிகைகளுடன் நடித்திருக்கிறேன் .அப்படி பார்த்தால் எல்லாருக்கும் கணவராக ஆகிவிட முடியுமா? நடிகர்களை பற்றி கிசுகிசு எழுதுங்கள்… அது உண்மையா? பொய்யா? என்று தெரியாமல் எழுதி அடுத்தவர்களின் வாழ்க்கையை கெடுத்து விடாதீர்கள். தயவு செய்து எங்களை நிம்மதியாக இருக்க விடுங்கள் என நடிகர் ரவிகாந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

  • Instagram ஓட்டலில் அறை எடுத்து 20 நாட்களாக சிறுமியை சீரழித்த இளைஞர் : இன்ஸ்டாகிராம் நண்பனால் வந்த வினை!!
  • Views: - 158

    0

    0