இறுதிச்சுற்று படத்தின் உண்மையான “மதி” நான் தான் – மிரட்டி ஏமாற்றிய சுதா கொங்கரா!

Author: Shree
26 November 2023, 4:40 pm

சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று. குத்துச்சண்டை விளையாட்டையும், பெண் வீராங்கனையும் மையப்படுத்தி வெளியான இத்திரைப்படத்தில் மாதவன் ஹீரோவாக நடிக்க ரித்திகா சிங் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இத்திரைப்படம் மெகா ஹிட் படமாக தமிழ் சினிமா வரலாற்றில் பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் வரும் மதி (ரித்திகா சிங்) என்ற கேரக்டர் நான் தான் என கூறி குத்துச்சண்டை வீராங்கனை ஒருவர் பேட்டி கொடுத்துள்ளார்.

மேலும் பேசிய அவர், என்னுடைய ரியல் ஸ்டோரி தான் அந்த திரைப்படம். சுதா கொங்கரா என்னை முதன்முதலில் நேரு ஸ்டேடியமில் தான் சந்தித்து பேசினார். கிட்டத்தட்ட 3 முதல் 4 மணிநேரம் பேசினோம். அவர் என்னுடைய வாழ்க்கை, விளையாட்டு ஆர்வம் உள்ளிட்டவற்றை ஒன்றுவிடாமல் கேட்டுக்கொண்டது மட்டும் அல்லாமல் மும்பையில் இருந்து ஆள் வரவைத்து ஸ்கிரிப்ட் எழுதினார்கள். எல்லாம் முடிந்ததும் ஒரு கட்டத்தில் சுதா கொங்கரா என்னை மிரட்டினார் என அந்த பெண் பேசினார். இந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?