மொட்டை.. கர கர குரல்.. எதனால இப்படி ஆச்சு தெரியுமா?.. மொட்டை ராஜேந்தரன் வெளியிட்ட உண்மை..!

Author: Vignesh
5 January 2023, 1:45 pm

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு கலைஞர்களை ரசிகர்கள் ஒரு அடையாளம் வைத்து அங்கீகரிப்பார்கள் அந்த வகையில், பிரபலமானவர் தான் மொட்டை ராஜேந்திரன். அப்படி அவரின் மொட்டை மூலம் மக்களிடம் பிரபலம் ஆனார்.

மொட்டை ராஜேந்திரன் பாலா இயக்கிய நான் கடவுள் என்ற திரைப்படத்தில் மூலம் நடிகராக அறிமுகமாகி பாஸ் என்கிற பாஸ்கரன், டார்லிங், தில்லுக்கு துட்டு என தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்து தனக்கு என ஒரு அங்கிகாரத்தை பெற்று உள்ளார்.

mottai-rajendran - updatenews360

ஆரம்பத்தில் இருந்து மொட்டை ராஜேந்திரனுக்கு தலைமுடி இருந்ததாம். மலையாள திரைப்படமான ரெட் இந்தியன் என்ற படத்தில் நடித்துகொண்டிருந்த போது கதாநாயகனிடம் அடி வாங்கி இவர் ஒரு குளத்தில் விழுவது போல் காட்சி எடுத்தார்களாம்.

mottai-rajendran - updatenews360

அந்த படத்தில் நடித்துக்கொண்டு இருந்தபொழுது வில்லன் ஒரு கழிவு வாய்க்காலில் குதிப்பது போன்றதொரு காட்சிக்காக அப்படியே கழிவுநீரில் குதித்துவிட்டாராம். அதன் பின்னர் அவரது உடலிலே தோல்நோய் ஏற்பட்டு அவரது உடலிலிருந்து அத்தனை முடிகளும் கொட்டத்தொடங்கி விட்டனவாம். குரலும் மாறிவிட்டதாம்.

mottai-rajendran - updatenews360

அதன் பின்னர் எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சரிசெய்ய முடியவில்லையாம். நிறைய முடிகள் கொட்டவே மொட்டை அடித்துக்கொண்டு மொட்டை ராஜேந்திரன் திரைப்படங்களில் நடிக்க துவங்கி உள்ளார்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!