பிரபல நடிகைக்காக கோடி கணக்கில் செலவு செய்த உதயநிதி.. ஓஹோ.. ரூட்டு அப்டி போகுதா..!

Author: Vignesh
29 ஜனவரி 2024, 3:30 மணி
udhayanidhi stalin
Quick Share

அழகிய நடிகையான நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படமே சூப்பர் ஹிட் அடிக்க அடுத்தடுத்து ஹிட் கொடுப்பார் என பார்த்தால் தொடர் தோல்வியால் சறுக்கலை சந்தித்து மார்க்கெட் இல்லாமல் போனார்.

nivetha pethuraj - updatenews360

முன்னதாக தமிழில், என்மனசு தங்கம், டிக் டிக் டிக், பொன் மாணிக்கவேல், திமிரு பிடித்தவன், சங்கத்தமிழன்போன்ற படங்களில் நடித்துள்ளார். நிவேதா பெத்துராஜ். தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கில் பல முன்ணனி ஹீரோக்கள் படங்களில் நடித்திருக்கிறார். தெலுங்கு பக்கம் செல்ல அங்கு அவர் தொட்டதெல்லாம் ஹிட் அடித்து ராசியான நடிகையாக முத்திரை குத்தப்பட்டார். இதனிடையே, மெண்டல் மதிலோ படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் அதன் பிறகு சித்ரலஹரி, அலவைகுந்தபுரமுலு, ரெட் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

nivetha pethuraj - updatenews360

முன்னதாக, மதுரையில் பிறந்து வளர்ந்து துபாயில் வளர்ந்து அழகு பொம்மையாக கோலிவுட்டில் அறிமுகம் ஆகி ஒட்டுமொத்த இளசுகளின் மனதிலும் ஆழமான இடத்தை நடிகை நிவேதா பெத்துராஜ் தக்க வைத்தவர். திரைப்படங்களை தாண்டி தாண்டி தனக்கு பிடித்த கார் ரேஸில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.

அத்துடன் பாட்மிண்டன் விளையாட்டிலும் ஈடுபாடு காட்டி வரும் அவர் தற்போது பாட்மிண்டன் விளையாடி கோப்பை வென்று இருக்கும் புகைப்படங்களை நிவேதா பெத்துராஜ் வெளியிட்டு இருக்கிறார். நடிப்பையும் தாண்டி அவருக்கு இவ்வளவு திறமை இருக்கிறதா என ரசிகர்கள் வியந்து பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.

udhayanidhi stalin nivetha pethuraj

இந்நிலையில், பிரபல பத்திரிக்கையாளர் பாண்டியன் உதயநிதி குறித்து தற்போது, பேசியுள்ளார். அதில், அவர் தமிழ் மற்றும் தெலுங்கு படத்தில் நடித்து வரும் நிவேதா பெத்துராஜ் உதயநிதிக்கு ஜோடியாக “பொதுவாக எம்மனசு தங்கம்” என்ற படத்தில் நடித்துள்ளார். நடிகர் அஜித் போல நிவேதாவும் கார் ரேசில் அதிக ஆர்வம் உடையவர். அதனால், இவர் தனக்கென ஒரு கார் ரேஸ் ஏற்பாடு செய்யும்படி உதயநிதியிடம் கோரிக்கை வைக்க உடனே உதயநிதி ஏற்று கொண்டார்.

udhayanidhi stalin nivetha pethuraj

உதயநிதி நடிகைகளின் கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் செய்து கொடுத்துவிடுவார். ஆனால், மக்களின் கோரிக்கைகளை உடனே பரிசீலிக்கப்படாது எனவும், முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு சென்றுள்ளதால், தற்போது உதயநிதி தான் நிழல் முதலமைச்சராக செயல்பட்டு வருகிறார். அதனால், நிவேதா பெத்துராஜ் போல பல நடிகைகள் வந்தாலும், அவர்களுடைய கோரிக்கைகள் பரிசளிக்கப்படும் என, பாண்டியன் பகிரங்கமாக உதயநிதி குறித்து விமர்சித்துள்ள இந்த விஷயம் சினிமா வட்டாரத்தில் மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Kangana பிரபல பாடகருடன் காருக்குள் போதையில் தள்ளாடிய ஆளுங்கட்சி பெண் எம்பி.. வெளியான ஷாக் தகவல்!
  • Views: - 703

    1

    0