2 முறை விவாகரத்து.. ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட டாப் சீரியல் நடிகை..!

Author: Vignesh
13 February 2023, 10:30 am

ரேஷ்மா தமிழில் முதல் முதலில் அறிமுகமான படம் “வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” இந்த படத்தில் ‘புஷ்பா’ என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தார் . இவர் சினிமாவிற்கு முன் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் விமான பணிப்பெண்ணாகவும் பணிபுரிந்துள்ளார். வெறும் glamour role கதாபாத்திரங்கள் மட்டுமே கிடைத்தது. இவரை ” ரேஷ்மா ” என்னும் பெயரை விட ” புஷ்பா ” என்று தான் பலருக்கும் இவரைத் தெரியும் .

ReshmaPasupuleti - updatenews360

விஜய்டிவியில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் ” பிக் பாஸ் ” நிகழ்ச்சியில் 15 போட்டியாளர்களில் 1 போட்டியாளராக கலந்துகொண்டார். அந்நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கை பற்றியும் அவர் இல்லறவாழ்கையில் நடந்த மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்

தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ” ஜெனிபருக்கு” பதிலாக ” ரேஷ்மா ” தான் நடிக்கிறார்.

reshma pasupuleti - updatenews360

சமூகவலைத்தளங்களில் தினமும் நடிகை ரேஷ்மா தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமே . மாடர்ன் லுக்கிலும் சரி ட்ரடிஷனல் லுக்கிலும் சரி படு கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில், நிஷாந்த் ரவிச்சந்திரன் என்ற ஆண் நண்பருடன் ரேஷ்மா நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Reshma-Pasupuleti-updatenews360.png 2

மேலும் அவர், வாழ்க்கை என்பது குறுகலானது அதனால் உங்களை மகிழ்விக்கும் மற்றும் அன்பு காட்டும் நபர்களுடன் நேரத்தை செலவிடுங்கள் என்று ரேஷ்மா பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் இவரை காதலிக்கிறாரா என்று கேட்டு வருகின்றனர்.

40 வயதான ரேஷ்மா இதற்கு முன்பு இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றதுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…