ஒரே நாளில் தட்டிதூக்கிய ரெட்ரோ! முதல் நாள் கலெக்சனே இவ்வளவு கோடியா? அடேங்கப்பா!
Author: Prasad2 May 2025, 12:21 pm
ஆக்சன் கிங் சூர்யா?
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் ஜோஜு ஜார்ஜ், நாசர், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என்றே கூறுகிறார்கள். சூர்யாவின் சண்டை காட்சிகள் பலவும் ரணகளமாக இருப்பதாக கருத்து தெரிவிக்கின்றனர். ஒரு படி மேலே போய் அடுத்த ஆக்சன் கிங் சூர்யாதான் எனவும் சிலர் பாராட்டுகின்றனர்.

ஆனால் இத்திரைப்படத்தின் திரைக்கதை சற்று சொதப்பிவிட்டதாகவும் விமர்சனங்கள் எழுகின்றன. முதல் பாதி அதிரடியாக இருப்பதாகவும் ஆனால் அதே நேரத்தில் இரண்டாம் பாதி சற்று திராபையாக இருப்பதாகவும் கருத்து நிலவுகிறது.
எனினும் இத்திரைப்படத்தின் ஓபனிங் படு விமரிசையாக இருந்தது. அந்த வகையில் முதல் நாளிலேயே படுபயங்கரமாக கல்லா கட்டியுள்ளது இத்திரைப்படம்.
இவ்வளவு கோடி வசூலா?
“ரெட்ரோ” திரைப்படம் வெளியாகி ஒரு நாள் முடிவடைந்துள்ள நிலையில் முதல் நாளிலேயே ரூ.28 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியாவில் மட்டுமே ஒரே நாளில் ரூ.19 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக செய்திகள் வெளிவருகின்றன.