அபாய கட்டத்தை தாண்டிய ரெட்ரோ? என்னைய காப்பாத்திட்டீங்க-சூர்யா ஹேப்பி அண்ணாச்சி!
Author: Prasad5 May 2025, 11:50 am
கலவையான விமர்சனம்
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த வாரம் மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான “ரெட்ரோ” திரைப்படம் அதிகளவு எதிர்பார்ப்பில் வெளியான திரைப்படமாகும். ஆனால் ரசிகர்கள் சிலருக்கு இத்திரைப்படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஆனால் ஒரு சிலர் இத்திரைப்படத்தை குறித்து பாஸிட்டிவ் ஆகவே கூறி வந்தனர்.

பொதுவாக இத்திரைப்படத்தின் முதல் பாதி விறுவிறுப்பாக செல்கிறது எனவும் ஆனால் இரண்டாம் பாதி திராபையாக இருப்பதாகவும் கூறினார்கள். எனினும் சூர்யாவின் ஆக்சன் காட்சிகள் அதகளமாக இருப்பதாக பாராட்டுகின்றனர். இந்த நிலையில் இத்திரைப்படம் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போட்ட காசை எடுத்தாச்சு!
“ரெட்ரோ” திரைப்படத்தை சூர்யா-ஜோதிகா இருவரும் இணைந்து தயாரித்திருந்தனர். இத்திரைப்படத்தின் பட்ஜெட் ரூ.65 கோடி ஆகும். அந்த வகையில் கடந்த 4 நாட்களில் இத்திரைப்படம் உலகளவில் ரூ.80 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக தமிழக வசூல் மட்டுமே ரூ.50 கோடியை நெருங்கவுள்ளதாம். இதன் மூலம் இத்திரைப்படத்திற்காக போடப்பட்ட முதலீட்டை கைப்பற்றியுள்ளார் சூர்யா.

இதற்கு முன்பு சூர்யா நடிப்பில் வெளியான “கங்குவா” திரைப்படம் படுதோல்வியடைந்தது. மேலும் அத்திரைப்படம் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தையும் கொடுத்தது. அந்த வகையில் “ரெட்ரோ” திரைப்படம் சூர்யாவுக்கு அதிக வசூலை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.