அவ்வளவுதான்; எல்லாரும் கிளம்புங்க- காந்தாரா 2 படத்துக்கு கும்புடு போட்ட ரிஷப் ஷெட்டி?

Author: Prasad
21 July 2025, 12:50 pm

காந்தாரா மரணங்கள்!

கடந்த 2022 ஆம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளிவந்த “காந்தாரா” திரைப்படம் இந்திய அளவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. ரூ.14 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ.500 கோடி வசூலை குவித்தது. பஞ்சுருளி என்ற நாட்டார் தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து எழுதபட்ட ஒரு வித்தியாசமான ஆக்சன் திரில்லர் திரைப்படமாக இது உருவானது. 

“காந்தாரா” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமான “காந்தாரா சேப்டர் 1” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. இத்திரைப்படம் வருகிற அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மிக விறுவிறுப்பாக இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. 

Rishab shetty announced wrap on kantara chapter 1 movie

ஆனால் படப்பிடிப்பு தொடங்கியதில் இருந்து இத்திரைப்படத்தில் நடித்த மூன்று பேர் தொடர்ந்து மரணமடைந்தனர். இது படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  பஞ்சுருளி தெய்வத்தின் சாபம்தான் இது என பலரும் பேசத்தொடங்கிவிட்டனர். எனினும்  இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்தபடியேதான் இருந்தது. 

காந்தாரா தி சேப்டர் 1; Wrap?

இந்த நிலையில் “காந்தாரா சேப்டர் 1” திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் “காந்தாரா சேப்டர் 1” படத்தின் பிரம்மிக்க வைக்கும் BTS காட்சிகள் இடம்பெற்றுள்ளன. 

Rishab shetty announced wrap on kantara chapter 1 movie

மேலும் இந்த  வீடியோவின் பின்னணியில் பேசும் இயக்குனரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி “2 வருடங்கள் கஷ்டப்பட்டு 250 நாட்கள் இத்திரைப்படத்தை எடுத்துக்கொண்டிருக்கிறோம். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் நான் நம்புகிற தெய்வம் என்னை கைவிடவில்லை. என்னுடைய தயாரிப்பாளர்களும் என்னுடைய குழுவும் என்னுடைய முதுகெலும்பாக இருந்தார்கள்” என கூறியுள்ளார். இந்த அசத்தலான மேக்கிங் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.  

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!