ராசி இல்லன்னு ஒதுக்கப்படும் ப்ரியா பவானி ஷங்கர்?.. பிரபல நடிகர் கொடுத்த பதில்..!

Author: Vignesh
18 July 2024, 1:03 pm

வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் நடிகைகளை போலவே, தொகுப்பாளர்கள, செய்தி வாசிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அந்த வகையில், தமிழ் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் பிரியா பவானி ஷங்கர். இதில், இவர் பேசும் அழகு, நேர்த்தியான லுக் போன்றவற்றால் இவருக்கு தனி ரசிகர் பாலோயர்ஸ் உருவாகினர்.

priya bhavani shankar - updatenewse360

பின்னர், ரசிகர்கள் ஆதரவால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் கல்யாணம் முதல் காதல் வரை என்னும் தொடரில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 2017ம் ஆண்டு, வைபவ் ஜோடியாக மேயாத மான் படத்தில் நடித்ததன் மூலம் நடிகையாக தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா, கசடதபற, ஓ மணப்பெண்ணே, யானை, திருச்சிற்றம்பலம் , பத்து தல, அகிலன், ருத்ரன், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்து உள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் நடிகர் ரிஷிகாந்த் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில், பிரியா பவானி சங்கர் ராசி இல்லாத நடிகை என்று சிலர் சமூக வலைத்தளங்களில் சொல்கின்றனர். இதற்கு பதில் அளித்த அவர், இது என்ன என்றே எனக்கு புரியவில்லை. பிரியா பவானி ஒரு சிறந்த நடிகை அவர் ரொம்ப அன்பாக நடந்து கொள்வார். இதுபோன்ற கமெண்ட்களை கண்டுகொள்ளாமல் நடிப்பில் கவனம் செலுத்தினால் போதும் என்று ரிஷிகாந்த் தெரிவித்துள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?