பொன்னியின் செல்வனில் நடிக்க உடலை தயார் செய்யும் கட்டதுரை!

19 December 2019, 11:09 am
Quick Share

மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் தற்போது பலரின் கனவு படமாக மாறிவிட்டது. அதற்க்கு காரணம் பொன்னியின் செல்வனின் கதையமைப்பும், மணிரத்னம் எப்படி எடுக்க போகிறார் என்ற ஆவலும் தான்.

மேலும் படத்தில் நடித்து வரும் முக்கிய முன்னணி நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி போன்றவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மேல் உள்ள ஆவலும் தான் என்றே சொல்லலாம். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது. நாளுக்கு நாள் படம் குறித்த அப்டேட்கள் வந்த வண்ணம் உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் தாய்லாந்து நாட்டின் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்து வருகிறதாம்.

தற்போது இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் ரியாஸ் கான் நடிக்க போகிறாராம். வரலாற்று கதை என்பதால் தனது உடலமைப்பை மேலும் கூட்டி மாஸான ஒரு லுக்கில் போட்டோ எடுத்து போட்டிருக்கிறார். விக்ரம், ஜெயம் ரவியை தொடர்ந்து மேலும் ஒரு பாடிபில்டர் ரியாஸ் கான் படத்தில் இணைந்துள்ளது மேலும் ஆவலை கூடியுள்ளது.