அவ்வை சண்முகியில் ஜுமான்ஞ்சி ஹீரோ; காத்திருந்த டுவிஸ்ட்,,.

Author: Sudha
5 July 2024, 1:50 pm

1993 ஆம் ஆண்டு ஜுமாஞ்சி திரைப்பட புகழ் ராபின் வில்லியம் நடிப்பில் வெளிவந்த படம் மிஸஸ் டவுட்ஃபயர். அமெரிக்க நகைச்சுவை-நாடகத் திரைப்படம்.

அன்னே ஃபைன் எழுதி 1987இல் வெளிவந்த நாவலான மேடம் டவுட்ஃபயரை அடிப்படையாகக் கொண்டது, மிஸஸ் டவுட் ஃபயர் திரைப்படம்.

3 வருடங்கள் கழித்து 1996 இல் கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்க வெளிவந்த திரைப்படம்.கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து இருக்கும் கணவன் தன் மகளை பிரிய முடியாமல் மனைவிக்கு தெரியாமல் மாறு வேடத்தில் சென்று மனைவியின் அன்பை எப்படி பெறுகிறார் என்பதே கதை.

கே எஸ் ரவிக்குமார் இத்திரைப்படத்தை இயக்கினார். கமல்ஹாசன், மீனா, நாகேஷ், ஜெமினி கணேசன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

மிசஸ் டவுட்ஃபயர் திரைப்படத்தில் ராபின் வில்லியம்ஸ் நடித்த கதாப் பாத்திரத்தை தமிழில் திறம்பட செய்திருந்தார் நடிகர் கமல்ஹாசன்.

மிஸஸ் டவுட் ஃபயர் திரைப்படம் 1993 ஆம் ஆண்டுக்கான சிறந்த ஒப்பனைக்கான ஆஸ்கார் விருதை வென்றது.

  • savukku shankar said that red giant movies company plan to flop jana nayagan movie ஜனநாயகன் படத்தின் சோலியை முடிக்க ரெட் ஜெயண்ட் போட்ட பக்கா  பிளான்? பிரபலம் ஓபன் டாக்…