எப்படி இருந்த ரோபோ ஷங்கர் இப்படி ஆயிட்டாரே? பாவம் மனுஷன்!

Author: Shree
18 March 2023, 3:25 pm

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

அதையடுத்து தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி , புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். அண்மையில் கூட அனுமதியின்றி அலெக்சாண்டரியன் வகை பச்சை கிளிகளை வளர்த்து சர்ச்சையில் சிக்கினார்.

இந்நிலையில் தற்போது ஆளே அடையாளம் தெரியாத வகையில் பஞ்சத்தில் அடிபட்டவர் போன்று படு ஒல்லியாக எலும்பும் தோலுமாக இருக்கும் புகைபடடம் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. இது அவர் நடித்து வரும் புதிய படத்திற்கான கெட்டப்பாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து இந்த போட்டோ வெளியானது குறிப்பிடத்தக்கது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?