நலங்கு வைக்க 2 கோடி செலவாச்சா?.. மகள் திருமணம் குறித்து கடுப்பான ரோபோ ஷங்கரின் மனைவி..!(வீடியோ)

Author: Vignesh
3 April 2024, 4:44 pm

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான ரோபோ ஷங்கர் விஜய் தொலைக்காட்சியின் கலக்கப் போவது யாரு? நிகழ்ச்சியின் மேடை சிரிப்புரை மூலமாக பரவலாக அறியப்பட்டார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

robo shankar-updatenews360

அதையடுத்து தமிழ் திரைப்படங்களில் வாய்ப்பு கிடைக்க நடித்து வருகிறார். இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, வாயை மூடி பேசவும், மாரி , புலி போன்ற திரைப்படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார். இவரது மனைவி பிரியங்காவும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

மேலும் படிக்க: ஷிவானி கூட ஜோடியா நிப்பாருன்னு பார்த்தா.. பாலாஜி முருகதாஸுக்கு திடீர் என நடந்த ரகசிய திருமணம்..!

இவர்களது மகள் இந்திரஜாவும் தளபதி விஜயின் பிகில் படத்தில் பாண்டியம்மாவாக நடித்து பிரபலம் ஆனார். தொடர்ந்து தற்போது பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நேரத்தில் ரோபோ ஷங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக இருந்து, அதன் பின்னர் தொடர் சிகிச்சை எடுத்து தற்போது நலமாக இருக்கிறார்.

robo shankar daughter

மேலும் படிக்க: விதி இப்படி ஆயிடுச்சு.. இதனால தான் என் பொண்ணு சினிமாவுக்கு வரல.. ஊர்வசி ஓபன் டாக்..!

முன்னதாக, இந்திரஜாவிற்கு அவரது முறை மாமாவுடன் திருமணம் நடைபெற்றது. அவர்கள் இருவருக்கும் சுமார் 15 வயது வித்தியாசம் இருந்தும் சம்மதம் தெரிவித்த ரோபோ சங்கர் அவரது மகளுக்கு அதிக செலவில் திருமணம் செய்து வைத்துள்ளார். மேலும், மருமகனுக்கு வரதட்சணையாக 20 லட்சம் ரூபாய்க்கு ஒரு சொகுசு கார் தங்க நகைகள் உள்ளிட்ட பல விஷயங்களை செய்துள்ளார். தான் அடிமட்டத்திலிருந்து கஷ்டப்பட்டு வந்துள்ளதால், இந்த நிலைமைக்கு வந்துள்ளேன். தற்போது, தன் மகளின் திருமணத்தை ஊரே திரும்பிப் பார்க்கும் வகையில் பிரம்மாண்டமாக நடத்தி இருப்பது பெருமையாக இருப்பதாகவும் ரோபோ சங்கர் தெரிவித்துள்ளார்.

robo shankar daughter

இந்நிலையில், பேட்டியில் கலந்து கொண்ட ரோபோ சங்கரின் மனைவியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, நலங்கு வைக்க மட்டும் இரண்டு கோடி செலவாச்சாம் என்று பேசப்படுவதாக கேள்வி எழுப்பப்பட்டதற்கு, கடுப்பான ரோபோ ஷங்கரின் மனைவி ஆமாம், அந்தப் பக்கம் போனா ஒரு கோடி இந்த பக்கம் போனா ரெண்டு தெருக்கோடி ரெண்டு பேரும் நானும் ரோபோ சங்கரும் ஒக்காந்து இருந்தோம் என்று கலகலப்பாக கடுப்பாகி பதில் தெரிவித்துள்ளார்.

  • Akhil Akkineni, Zainab Ravdjee trolled for nine-year age gap நாகர்ஜூனா குடும்பத்துக்கு அடுத்த அதிர்ச்சி.. AUNTYஐ திருமணம் செய்யும் மகன்..!!
  • Views: - 263

    0

    0