நிர்வாணமா நடிச்சேன்னு சித்திரவதை செய்றாங்க.. உங்க வீட்டு பொண்ணா இருந்தா இப்படி பேசுவீங்களா? ரோஜா ஆதங்கம்..!(வீடியோ)

Author: Vignesh
5 October 2023, 10:43 am

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ரோஜா. இவர் ரஜினி, சிரஞ்சீவி உள்பட தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார். ஆந்திராவை பூர்வீகமாக கொண்ட ரோஜா தமிழ் சினிமாவிலும் பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.

roja

2002-ஆம் ஆண்டு ரோஜா இயக்குனர் ஆர்.கே. செல்வமணியை காதலித்து திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். அரசியலில் ஆர்வம் கொண்ட ரோஜா 1999-ல் தெலுங்கு தேச கட்சியில் இணைந்தார். 2009-ல் அக்கட்சியை விட்டு ரோஜா விலகி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த இவர் பின்னாளில் எம்.எல்.ஏ ஆனார். இரண்டாவது முறையாக நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது ஆந்திராவின் சுற்றுலா மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சராக இருக்கிறார்.

இந்நிலையில், சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ஒருவர் ரோஜாவை அசிங்கப்படுத்தி பேசியது ஆந்திராவை அதிர்ச்சிக்குள்ளாகியது. தற்போது, அது குறித்து நடிகை ரோஜா கண்ணீருடன் பேசி உள்ளார். அதில், தான் நடித்த படத்தில் நிர்வாணமாக நடித்ததாக கூறி சித்திரவதை செய்கிறார்கள் என்றும், சட்டசபையில் சிடிகளும் காட்டப்பட்டது. அந்த சிடியில் இருப்பது நான்தான் என்று நிரூபிக்கவும் இல்லை. என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? உங்கள் வீட்டு பெண்களாக இருந்தால் இப்படி பேசுவீர்களா? பேசினால் எப்படி இருக்கும் என்று பேசி இருக்கிறார். என்னை கேலி செய்தார்கள். உங்கள் கட்சியில் இருக்கும் போது நல்லவர்களாகவும், வேறு கட்சியில் இருக்கும் போது கெட்டவர்களாகவும் நான் எப்படி இருக்க முடியும். பண்டாரு சத்யநாராயண மூர்த்தி பேசியது என்னை புண்படுத்தி இருக்கிறது என்று ரோஜா கண்ணீருடன் பேசியுள்ளார்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?