ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு..!

Author: Rajesh
21 ஜனவரி 2022, 6:57 மணி
RRR - Updatenews360
Quick Share

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஆகிய ஐந்து மொழிகளில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகர் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கான், நடிகை ஆலியா பட், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தினை பிரபல இயக்குனர் ராஜமெளலி இயக்கியுள்ளார்.
இதனிடையே ஆர்ஆர்ஆர்’ படம் ஜனவரி 7-ஆம் தேதி உலகம் முழுக்க தியேட்டர்களில் வெளியாகவிருந்தது. ஆனால், கொரோனா மூன்றாவது அலை பரவலால் திரையரங்குகளில் 50 சதவீதம், இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பிரச்சனைகளால் படத்தின் வெளியீட்டை தள்ளி வைத்தது படக்குழு.

இந்த நிலையில், தற்போது ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் வெளியிட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கட்டான இந்த காலக்கட்டத்தில், கொரோனா பரவல் குறைந்து, திரையரங்குகளில் 100 சதவீத அனுமதி அளிக்கப்பட்டால், மார்ச் மாதம் 18ஆம் தேதி வெளியாகும். இல்லையெனில், ஏப்ரல் 28 ஆம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • anna திமுக அரசுக்கு எதிராக ஒரு வரி கூட இல்லை.. சென்னை மழை குறித்து அண்ணாமலை கருத்து!!
  • Views: - 7762

    0

    0