இது நாலாவது முறை; நடிகரைப் பற்றி பேட்டியில் பேசிய பிரபல இயக்குனர்; இதுவா விஷயம்?

Author: Sudha
22 July 2024, 2:43 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். நல்ல நடிகர் என்ற பெயருடன் நல்ல இயக்குனர் என்பதையும் அவர் இயக்கத்தில் வெளியான பா.பாண்டி திரைப்படத்தின் மூலமாக நிரூபித்தார்.

தனுஷின் இயக்கத்தில் ராயன் வருகிற 26 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்து படங்களில் நடித்துக் கொண்டே இயக்குனராகவும் தன் பணியை செய்து வருகிறார். தற்போது நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி உள்ளார். விரைவில் இத்திரைப்படம் வெளியாக உள்ளது.

இதைத்தொடர்ந்து தனுஷ் நான்காவது முறையாக படம் ஒன்றை இயக்கி அவரே நடிக்கவுள்ளார் என சமீபத்தில் எஸ்.ஜே. சூர்யா அளித்த நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.இது குறித்து விசாரித்தபோது இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதத்தில் துவங்கும் என்கிறார்கள்.

  • Actor Ajith admitted to Apollo Hospital அப்போலோ மருத்துவமனையில் நடிகர் அஜித் அனுமதி… உடல்நிலைக்கு என்னாச்சு?