“எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கு..”ரஜினிகாந்த் – நயன்தாராவின் காதல் பாடல்..

Author: kavin kumar
9 October 2021, 9:25 pm
Quick Share

விஸ்வாசம் வெற்றிக்குப் பிறகு அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து முடித்துவிட்டார் ரஜினி. தீபாவளிக்கு வெளியாக போகும் இந்த படத்தோடு சிம்புவின் மாநாடு படம் மோதப் போகிறது.

மேலும், இந்த படத்தின் Motion Poster வெளியாகியது. அதன் பிறகு இந்த படத்தின் சிங்கிள் பாட்டு ரிலீஸ் ஆகியது. இதுவே மறைந்த பாடகர் எஸ் பி பி அவர்களின் கடைசி பாடல் ஆகும். ‘அண்ணாத்த அண்ணாத்த ‘என்னும் தொடங்கும் இந்த பாடல் ரசிகர்களின் ரிங்டோனாக மாறிவிட்டது.

தற்போது நயன்தாராவுடன் ஆன காதல் பாடல் ஆகிய “சார காற்றே” என்கிற ஒரு மெலடியை அள்ளித் தெளித்திருக்கிறார் டி இமான். இதனைக் கேட்ட ரசிகர்கள் “எங்கேயோ கேட்ட மாதிரியே இருக்கு” என்று கூறுகிறார்கள்.

Views: - 577

29

10