சினிமா வேண்டாம்; இளம் நடிகை எடுத்த அதிரடி முடிவு; கலக்கத்தில் ரசிகர்கள்,..

Author: Sudha
9 July 2024, 3:27 pm

2019 ஆம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் நடிகை துஷாரா விஜயன். ஆனால் ‘சார்பட்டா பரம்பரை’ படம் தான் கோலிவுட்டில் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தை தந்தது. பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஆர்யாவின் ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தனுஷின் 50 வது படமான “ராயன்” 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அண்மையில் ‘ராயன்’ இசை வெளியீட்டு விழா நடந்தது.

ராயன்’ இசை வெளியீட்டு விழாவுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துஷாரா விஜயன் ‘நான் என்னுடைய 35 வது வயதில் சினிமாவில் இருந்து விலகி விடுவேன்.அதன்பின்னர் நடிக்க மாட்டேன். 35 வயதுக்கு பின் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் என்று தெரிவித்தார்.நல்ல திறமை மிக்க நடிகை துஷாரா இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?