அந்த ஆள் கூட இருந்தா, என் மகனோட எதிர்காலம் என்னவாகும்.. பயத்தில் விஜய்யின் தந்தை SAC..!

Author: Vignesh
28 March 2024, 7:34 pm

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2-ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் சின்னம், கொடி உள்ளிட்டவை தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Vijay - Updatenews360

இதனிடையே, சமீபத்தில் தான் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் சேர செயலி ஒன்றை அறிமுகம் செய்திருந்தார். அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் விஜய் சமூகத்தில் நடக்கும் ஒவ்வொரு விஷயத்திலும் தொடர்ந்து தனது குரலை எழுப்பி வருகிறார்.

Vijay - Updatenews360

இந்த நிலையில், விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பெற்றோர்களை விஜய் ஒதுக்கி விட்டார், மனைவி சங்கீதாவையும் பிரிந்து விட்டார் என்று செய்திகள் வெளியாகிக் கொண்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய்யின் தந்தை எஸ் எஸ் சி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், விஜய்யை நான் எங்கேயும் விட்டுக் கொடுத்ததில்லை.

vijay sac-updatenews360

விஜய்க்கு என்னை தான் பிடிக்கும். ஆனால், இருவரும் பெரிதாக பேசியது கிடையாது. ஸ்கேல் வைத்து அடித்தேன், குழந்தையாகவே இப்பவும் நினைத்திருப்பது உங்களுக்கு தவறாக இருக்கலாம். ஆனால், என் குழந்தையிடம் உரிமை எடுத்தது தவறாக இருக்கலாம் என்று ஓப்பனாக பேசியுள்ளார். மேலும், அரசியலில் ஆரம்பிக்க விஜய் வற்புறுத்தியதும் சந்திரசேகர் தான் என்று செய்திகள் வெளியானது.

vijay sac-updatenews360

விஜயின் அரசியல் கட்சியை குறித்து எஸ் ஏ சந்திரசேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில் மனம் திறந்து பல விஷயங்களை கூறியுள்ளார். அதில், விஜயின் அரசியல் குறித்து தனக்கு பயமாக இருப்பதாகவும், புஸ்ஸி ஆனந்தையும் வெளுத்து வாங்கியுள்ளார். ஆன்லைன் குரூப் வைத்துள்ளார் புஸ்ஸி ஆனந்த். அதில், விஜயும் இடம் பெற்றுள்ளார். மன்றத்துக்கு புஸ்ஸி ஆனந்த் வந்ததும் அருகில் இருக்கும் பெஞ்சில் படுத்துக்கொண்டு ஒருவரை வைத்து ஃபோட்டோ எடுக்கச் சொல்லி அதை ஆன்லைன் குரூப்பில் பதிவிடுவார்.

vijay bussy anand

இதை 50 பேர் ஷேர் செய்யவும், 100 பேர் லைக் செய்யவும் சொல்லுவார். விஜயும் அதை நம்பி அண்ணன் நமக்காக உழைக்கிறான் என்று நாளையில் இருந்து என் அறையில் இருங்கள் என்று சொல்லிவிடுவார். இதுதான் அங்கு நடந்து கொண்டிருக்கிறது என்றும், இப்படிப்பட்ட ஆள்கூட இருந்தா என் மகனோட எதிர்காலம் என்ன ஆகுமோ என ஒரு தந்தையாக எனக்கு பயமாக இருக்கிறது என்று விஜய்யின் தந்தை எஸ் ஏ சந்திரசேகர் வெளிப்படையாக பேசியுள்ளார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?