யாரை கேட்டு நீ இங்க வந்த…? பிக்பாஸ் 8 ல் மகள் – கடிந்து கொண்ட விஜய் சேதுபதி – வைரல் வீடியோ!

Author:
7 October 2024, 12:06 pm

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையில் நேற்று பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக துவக்கி வைக்கப்பட்டது. விஜய் டிவியில் இதுவரை ஏழு சீசன் ஒளிபரப்பாகி முடிந்த நிலையில் தற்போது 8வது சீசன் மிகவும் புது விதமாக பல வித்தியாசமான கண்ணோட்டத்தில் துவங்கப்பட்டிருக்கிறது.

bigg boss 8 vj

இந்த சீசனை கமல்ஹாசன் இடத்திலிருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். அதுவே இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக பார்க்கப்பட்டு வந்தது. இதில் முதல் போட்டியாளராக பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் உள்ளே சென்றதை எடுத்து இரண்டாவது போட்டியாளராக இளம் நடிகை சாச்சனா நேமிதாஸ் உள்ளே சென்றிருக்கிறார்.

கடைசியாக விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மகளாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சாச்சனா நேமிதாஸின் எதார்த்தமான நடிப்பு அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஒரே படத்திலேயே மக்களின் மனதில் இடத்தை பிடித்தார் .

sachana namidass

இப்படியான நிலையில் அவர் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். சாச்சனா முன்னதாக ப்ரோமோவில் எனக்கு 21 வயசு ஆகுது. நான் பார்க்க ஸ்கூல் பொண்ணு மாதிரி இருப்பேன் அப்படின்னு எல்லாரும் சொல்லுவாங்க. நான் மீடியாவுக்கு வந்ததே என்னோட அம்மாவோட பர்மிஷனில் தான். அப்பாவுக்கு இதுல இஷ்டமே இல்ல. அம்மாவின் ஆசையை நிறைவேற்ற தான் நான் சினிமாவில் நுழைந்தேன்.

நான் அம்மாவுக்காக மகாராஜா திரைப்படத்தில் நடித்திருந்தாலும் இப்போ எனக்கு சினிமா மீது ஆர்வம் அதிகமாகிறது. சினிமாவில் அடுத்தடுத்த கட்டத்தை பிடிக்கணும் அப்படின்னு ரொம்ப கனவோடு இருக்கிறேன். அதற்கு இந்த பிக் பாஸ் சீசன் 8 மேடை எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என சாச்சனா கூறி இருந்தார் .

அப்போது சாச்சனாவை வரவேற்ற விஜய் சேதுபதி யாரை கேட்டு நீ இங்கு வந்தாய்? என உரிமையோடு கேள்வி எழுப்பினார். மேலும் பேசிய விஜய் சேதுபதி நான் உன்னிடம் ரொம்பவே சகஜமாக பேசி இருக்கேன். அதனால இப்ப என்ன பேசுறது எனக்கு தெரியல. நீ தைரியமா விளையாட வாழ்த்துக்கள் எனக்கூறி அனுப்பி வைத்தார்.

maharaja sachana

இதையும் படியுங்கள்: குடும்பத்தோடு குத்தாட்டம் போட்ட கொட்டாச்சி… மகளை விட மனைவி கிளி மாதிரி இருக்காங்களே!

அதற்கு சாச்சனா ஓகே அப்பா எனக் கூறியதும் விஜய் சேதுபதி உனக்கு அப்பானு கூப்பிடு கூப்பிடனும்னு தோணுச்சுன்னா நீ அப்பானே கூப்பிடு. இல்ல சார்ன்னு கூப்பிடனும்னாலும் நீ சார் என்றே கூப்பிடலாம் எனக்கூறி சாச்சனாவை அனுப்பி வைத்தார். மேலும் சில சமயங்களில் நான் ஸ்டிர்ட்டாக ஏதேனும் சொன்னால் எதுவும் நினைக்க வேண்டாம் என ரீல் மகள் சாச்சனாவுக்கு அட்வைஸ் கொடுத்து அனுப்பினார் விஜய் சேதுபதி. இதோ அந்த வீடியோ:

  • 12th fail fame Vikrant Massey will leave Cinema பிரபல நடிகர் சினிமாவில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.. அதிர்ச்சியில் திரையுலகம்!
  • Views: - 277

    0

    0