சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்த தமிழ் திரைப்படம்? மகிழ்ச்சி வெள்ளத்தில் பிரபல இயக்குனர்…

Author: Prasad
26 August 2025, 2:10 pm

மிடில் கிளாஸ்களின் போராட்டம்…

“8 தோட்டக்கள்” திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி வெளியான திரைப்படம் “3BHK”. ஒரு மிடில் கிளாஸ் குடும்பம் தங்களுக்கென ஒரு சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவை சுமந்துகொண்டு அன்றாட வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்கின்றனர். இதுதான் “3BHK” திரைப்படத்தின் கதைக்கரு. இதனை வாழ்க்கைக்கு மிக நெருக்கமான காட்சிகளோடு திரைக்கதை அமைத்து மிகவும் யதார்த்தமான ஒரு படைப்பாக நமக்கு அளித்திருந்தார் இயக்குனர் ஸ்ரீகணேஷ். 

இத்திரைப்படத்தில் சித்தார்த், சரத்குமார், தேவயானி, மீத்தா ரகுநாத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தை இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பார்த்துள்ளார். 

Sachin tendulkar likes the movie 3bhk

எனக்கு மிகவும் பிடித்த படம்..

Reddit தளத்தில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு சச்சின் டெண்டுல்கர் பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர், “நீங்கள் பார்த்த படங்களில் உங்களது ஃபேவரைட் என்ன?” என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சச்சின், “நேரம் கிடைக்கும்போதெல்லாம் திரைப்படங்கள் பார்ப்பது உண்டு. சமீபத்தில் நான் பார்த்த “3BHK”, “Ata Thambyacha Naay” போன்ற திரைப்படங்கள் பிடித்திருந்தது” என கூறினார். 

Sachin tendulkar likes the movie 3bhk

இச்செய்தி இணையத்தில் வைரல் ஆன நிலையில் இயக்குனர் ஸ்ரீகணேஷ், சச்சினுக்கு பதில் பதிவு ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “மிக்க நன்றி சார், நீங்கள்தான் எனது குழந்தை பருவ ஹீரோ. நீங்கள் சொன்ன வார்த்தை எங்களுக்கு மிகப்பெரியது” என தனது மகிழ்ச்சியை அதில் பகிர்ந்துகொண்டார்.  

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!