இந்த நாடு எதை நோக்கி போகுது- வீடியோவில் கதறி அழுத நடிகை சதா;அப்படி என்ன ஆச்சு?
Author: Prasad14 August 2025, 12:07 pm
அதிகரிக்கும் ரேபிஸ் நாய்க்கடி
நாடு முழுவதும் ரேபிஸ் நாய்க்கடியால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றம், டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. டெல்லியின் அனைத்து பகுதிகளிலும் நாய்களுக்கான காப்பகங்களை கட்ட வேண்டும் எனவும் நாய்களுக்கான கருத்தடை மற்றும் நோய் தடுப்பு மருந்துகளை வழங்கக்கூடிய நிபுணர்கள் இருக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கதறி அழுத சதா
நடிகை சதா சமீப காலமாக Wildlife Photography-ல் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தெரு நாய்கள் குறித்தான உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கதறி அழுதபடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த நாடு எங்கே போகிறது” என குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும், “நாய்க்கடியால் பல குழந்தைகள் இறக்கின்றனர், அவர்களுக்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்தவில்லை” என கேள்வி எழுப்புகின்றனர்.
