சுத்தி அடிக்கும் 6 அடி அரேபியன் குதிரை – வைரலாகும் சாய் தன்ஷிகாவின் வீடியோ

7 February 2021, 4:58 pm
Quick Share

இயக்குனர் எஸ் பி ஜனநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்த பேராண்மை படத்தின் மூலம் அறிமுகமானார் சாய் தன்ஷிகா. 5 பேர்களில் ஒருவராக நடித்த சாய் தன்ஷிகா தனது நடிப்பு திறமையால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தது. அரவான் படத்தின் ஆதிக்கு ஜோடியாக நடித்தார்.

இயக்குனர் பாலாவின் படமான பரதேசி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக விருதுகள் வாங்கினார். ரஞ்சித் இயக்கத்தில் வெளியான கபாலி படத்தில் ரஜினியின் மகளாக நடித்து அப்லாஸை அள்ளினார்.

சிறந்த கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்தாலும் மற்ற நேரங்களில் தற்காப்பு மற்றும் வீர விளையாட்டான சிலம்ப கலையை கற்றுக் கொண்டிருக்கிறார். சமூக வலைதளத்தில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அதில் சிலம்பத்தை சுழற்றுவது போல் எடுக்கப்பட்ட வீடியோவிற்கு வடிவேலுவின் காமெடி வசனங்களை பின்னணியை இணைத்துள்ளார்.

ஒரு சிலம்பத்தை சுற்றுவதே கஷ்டம், ஆனால் சாய் தன்ஷிகா இரண்டு சிலம்பத்தை சுற்றும் காட்சி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், 6 அடி அரேபியன் குதிரை மாதிரி இருந்துட்டு சிலம்பத்தை சுத்துற அழகே தனி என கமெண்ட் அடிக்கின்றனர்.

Views: - 1

0

0