விஜய் மீது இப்படி ஒரு ஆசையா…ஃபீலிங்கில் நடிகை சாய் பல்லவி..!

Author: Selvan
8 February 2025, 5:08 pm

விஜய் டான்ஸ் குறித்து நடிகை சாய் பல்லவி சொன்ன தகவல்

ஆரம்பத்தில் தன்னுடைய நடனத்தால் அனைவரையும் கவர்ந்து,மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் சாய் பல்லவி,இப்படத்தின் வெற்றி மூலம் அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்து குவிந்தன.

இதையும் படியுங்க: பலரை வாழ வைக்கும் நடிகர் ‘அஜித் ‘…இதுவரை வெளிவராத அதிர்ச்சி தகவல்..!

குறிப்பாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.கடந்த வருடம் வெளியான அமரன் திரைப்படத்தில் இவர் அற்புதமாக நடித்து பலரது பாராட்டையும் பெற்றார்.தற்போது நாக சைதன்யாவுடன் ‘தண்டேல்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

Sai Pallavi latest interview

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது யாருடன் நீங்கள் போட்டி நடனம் ஆட விரும்புகிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது ,அதற்கு சாய் பல்லவி யார் ஒருவர் நடனத்தை மிகவும் விரும்பி ரசித்து ஆடுகிறார்களோ அவர்களுடன் நான் போட்டி போட விரும்புகிறேன்,எப்போதும் நான் நடிகர் விஜயின் நடனத்தை விரும்பி பார்ப்பேன்,அவர் கூட நடனம் ஆட ஆசை என அந்த பேட்டியில் கூறியிருப்பார்.

விஜய் தற்போது அரசியலில் இறங்கியுள்ளதால் தன்னுடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடித்து வருகிறார்,இதனால் சாய் பல்லவியின் ஆசை நிறைவேற வாய்ப்பு மிகவும் கம்மி என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!