நிறுத்தப்பட்ட ஷூட்டிங்.. ராமாயணம் படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. அதிர்ச்சியில் பட குழு..!

Author: Vignesh
24 May 2024, 6:56 pm

கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் ராமாயணம் கதையை மையமாகக் கொண்டு ஆதிபுருஷ் என்னும் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இதை தொடர்ந்து, தற்போது நித்திஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் கதையை வைத்து மீண்டும் ஒரு படம் உருவாகி வருகிறது.

ramayana sai pallavi

மேலும் படிக்க: பணமும் போச்சு வாய்ப்பும் போச்சு.. கோவிந்தா கோவிந்தான்னு நடையை கட்டும் கிரண் ரத்தோட்..!

இப்படத்தில், ராமணாக ரன்வீர் கபூர் நடிக்க சீதையாக சாய்பல்லவி நடிக்க இருக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து புகைப்படம் வெளியானது. மேலும், இப்படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் கேஜிஎப் திரைப்படத்தின் மூலம் பிரபலமான யாஷ் நடிக்கிறார். இந்த நிலையில், ராமாயணம் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ramayana sai pallavi

மேலும் படிக்க: பாடகி சுசித்ரா பேசத் தடை.. உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு..!

அதாவது, காப்புரிமை பிரச்சனை காரணமாகத்தான் இப்படத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராமாயணம் திரைப்படத்திற்கான காப்புரிமை தங்களிடம் இருப்பதாகவும், அதை மீறி யாரும் படத்தை எடுக்கக் கூடாது என்று தயாரிப்பாளர் மது மண்டோனா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, ராமாயணம் படக்குழுவிற்கு அவர் நோட்டீஸ் அனுப்பி உள்ளாராம். இதனால்தான் ராமாயணம் படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?