இடுப்பு வளைந்து நெளிந்து சாய் பல்லவி போட்ட ஆட்டம் – ஒரே மணி நேரத்தில் 1 மில்லியன் வியூவ்ஸ் !

28 February 2021, 5:38 pm
Quick Share

நடிகை சாய் பல்லவி கொஞ்ச நாளாக எந்த புகைப்படங்களையும் அப்லோட் செய்யாமல் இருந்தார். என்ன என்று பார்த்தால் அம்மணி இப்போது மருத்துவ துறையில் படு பிஸியாம். சில மாதங்களுக்கு முன் Stressஐ மறக்க, எதோ ஒரு ஊரு பக்கம் போய் ஜாலியாக அருவியில் ஆலமர விழுதை பிடித்து தொங்குவது போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டதை எல்லாம் நாம் கண்டோம்.

இந்த நிலையில், இவரை Fairness cream விளம்பரத்தில் நடிக்க அழைத்தனர். அவர் நடிக்க மறுத்துவிட்டார். உடனே அந்நிறுவனம் ரூ.4 கோடி வரை தரத் தயாராக இருப்பதாகத் தெரிவித்தது. ஆனால் அதையும் சாய் பல்லவி மறுத்துவிட்டார் என்பது கூடுதல் தகவல்.

தற்போது தெலுங்கு படங்களில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மலையாளம், தமிழ் போல சாய் பல்லவி நடிப்பில் அடுத்தடுத்து வெளியான படங்கள் ஹிட்டடிக்க தெலுங்கு ரசிகர்களின் மனதையும் கவர்ந்துவிட்டார்.

இவர் தற்போது நடித்துள்ள “லவ் ஸ்டோரி” என்ற படத்தில் இடம் பெற்றுள்ள ‘சாரங்க டரியா’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. புடவையில் இடுப்பு மடிப்பு தெரிய ஆடிய ஆட்டத்தில் பாடல் வெளியான ஒரே மணி நேரத்தில் 1 மில்லியன் வியூவ்ஸ்களை தாண்டி ஹிட் அடித்துள்ளது இந்த பாடல்.

Views: - 1

43

3