ஜிவி பிரகாஷுக்காக சைந்தவி வைத்த இன்ஸ்டோ ஸ்டோரி; மீண்டும் ஜோடி சேர்ந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!
Author: Prasad2 August 2025, 1:27 pm
ஜிவி பிரகாஷ்-சைந்தவி விவாகரத்து
பல ஆண்டுகளாக காதலித்து வந்த ஜிவி பிரகாஷ்-சைந்தவி ஜோடி கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இத்தம்பதிக்கு ஒரு மகளும் உள்ளார். இந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2024 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷும் சைந்தவியும் விவாகரத்து செய்துகொள்வதாக அறிவித்தனர். இது பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
ஜிவி பிரகாஷ் இசையில் சைந்தவி பல இனிமையான பாடல்களை பாடியுள்ளார். “பிறை தேடும் இரவிலே”, “என் ஜீவன்” போன்ற பாடல்கள் ரசிகர்களை மெய் மறக்கச் செய்பவை. அந்த வகையில் இருவரும் பிரிந்தது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது. இருவரும் மீண்டும் சேர்ந்தால் எவ்வளவு அழகாக இருக்கும் என ரசிகர்கள் பலரும் தங்களது ஆவலை கூறி வருகின்றனர்.

தேசிய விருது…
இந்த நிலையில் “வாத்தி” திரைப்படத்திற்காக ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஜிவி பிரகாஷ் குமார் “வாத்தி” பட இயக்குனர் வெங்கி அட்லூரிக்கும் நடிகர் தனுஷிற்கும் நன்றிகளை தெரிவித்திருந்தார். மேலும் தனக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதை குறித்த சந்தோஷத்தையும் பகிர்ந்திருந்தார்.

இதனை தொடர்ந்து ஜிவி பிரகாஷின் பதிவை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்த சைந்தவி, ஜிவி பிரகாஷிற்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். இது ரசிகர்கள் பலரின் கவனத்தை குவித்துள்ளது.
