‘இது நடந்த பின் நயன்தாரா மாதிரி பண்ணலாம்’ – சாக்ஷி அகர்வால் லேட்டஸ்ட் பேட்டி வீடியோ வைரல்

Author: kavin kumar
7 November 2022, 7:25 pm
sakshi agarwal -updatenews360
Quick Share

கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலம் அடைந்தவர் சாக்ஷி அகர்வால். இவர் மாடலிங் மற்றும் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தினால், தனது மென்பொருள் வேலையை விட்டுவிட்டு நடிக்கத் தொடங்கியவர். ஜில்லென்று ஒரு கலவரம் என்னும் வீடியோ ஆல்பம் மூலம் நடிக்கத் தொடங்கி, இவருக்கு முதன் முதலில் கிடைத்த வாய்ப்பு ராஜா ராணி திரைப்படத்தில் வரும் ஒரு சில காட்சியில் நடிக்க தான்.

பின்னர், கன்னட மொழியில் ஒரு திரைப்படத்தில் நடித்தார். தமிழ் மொழியில், யோகன்,திருட்டு VCD, ஆத்யன் போன்ற திரைப்படங்களில் நடித்தார். அப்போது ஜாக்பாட் ஆபர் போல காலா திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பின்னர், விஸ்வாசம், டெட்டி, சிண்ட்ரெல்லா, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தற்போது, தமிழ், ஆங்கிலம் போன்ற மொழி திரைப்படங்களில் கமிட் ஆகியுள்ளார். தமிழில் பகீரா, நான் கடவுள் இல்லை, தி நைட், புரவி, குறுக்கு வழி, ஆயிரம் ஜென்மங்கள் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது சாக்ஷி அகர்வால் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் நான் கடவுள் இல்லை. இந்த படத்தை நீண்ட காலங்களுக்கு பிறகு எஸ்.ஏ.சி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் சமுத்திரக்கனி, சரவணன், இனியா உட்பட பலர் நடித்துள்ளனர். குழந்தைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள, இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் இந்த படம் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இந்நிலையில், இந்த படம் குறித்து சமீபத்தில் சாக்ஷி அவர்கள் பேட்டி ஒன்று அளித்து இருந்தார்.

அதில் அவர், நான் கடவுள் இல்லை படம் குறித்து கூறிவிட்டு, தற்போது, எனக்கு கதாநாயகி முக்கியத்துவம் வாய்ந்த படங்கள் தான் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னவுடனே பத்திரிக்கையாளர் ஒருவர் நீங்கள் நயன்தாரா மாதிரி நடிக்க போகிறீர்களா? என்று கேட்கிறார். உடனே சாக்ஷி, நயன்தாரா மிகப் பெரிய நடிகை, திறமையானவர், அவர் லேடி சூப்பர் ஸ்டார். நயன்தாரா கூட என்னை கம்பேர் பண்ண முடியாது. நான் இந்த மாதிரி கதை மட்டும் தான் நடிக்கப் போகிறேன் என்று இல்லை. எல்லா ஜானரிலும் நடிக்க ஆசைப்படுகிறேன். அவர்களைப் போல் மேலே உயர்ந்த வந்ததற்கு பிறகு இப்படிப்பட்ட கதையில் தான் நடிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Views: - 384

8

2