விவேக்கா? விஸ்வாசம் பட அஜித்தா?….salt & pepper லுக்கில் மாஸ் காட்டும் விவேக்…!!

28 October 2020, 5:18 pm
WhatsApp Image 2020-10-28 at 4.25.16 PM
Quick Share

நடிகர் விவேக்கின் ஒயிட் background-ல் சால்ட் அண்ட் பெப்பர் லுக் போட்டோ ஷுட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு என தமிழின் அனைத்து நட்சத்திர நடிகர்களுடனும் காமெடியில் கலக்கியவர் நடிகர் விவேக். சமீபத்தில் அமைதியின் நிறமான வெள்ளை நிற ஆடையில், வெள்ளை நிற background-ல், மாஸான சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் போட்டோ ஷுட் நடத்தி ரசிகர்களை வாவ் சொல்ல வைத்திருக்கிறார் விவேக்.

புகைப்படங்களை பார்க்கும் நமக்கே, இவர் விவேக்காக இல்ல, வீரம் பட அஜித்தா? என கேள்வி கேட்கும் அளவிற்கு கெட்-அப்பை டோட்டலாக மாற்றியுள்ளார் விவேக்.

தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக காமெடி நட்சத்திரமாக வலம் வந்த விவேக், கடந்த 2014ம் ஆண்டு வெளிவந்த ‘நான்தான் பாலா’ திரைப்படம் மூலம் ஹீரோவானார். பின்னர் மீண்டும் ‘வெள்ளைப்பூக்கள்’ படம் ஹீரோவானார். அந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.

தற்போது, விவேக்கின் ஸ்டைலிஷ் புகைப்படங்களை தங்கள் பக்கங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர் நெட்டிசன்கள். இதனையடுத்து, போட்டோ ஷுட் குறித்து நடிகர் விவேக், ட்விட்டர் பக்கத்தில் காஸ்ட்யூம் ஸ்டைலிஷ் குழுவினருக்கு credits கொடுத்துள்ளார்.

Views: - 43

0

0