அந்த மாதிரி நடிக்க மாட்டேன்னு சொன்னா உதைப்பாங்க.. பல நாள் கழித்து மனம் திறந்த சமந்தா..!
Author: Vignesh3 February 2024, 3:06 pm
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்ப்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார். நோய்த்தொற்றின் தாக்கத்தினால் உடல் ரீதியாக அவர் நாளுக்கு நாள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருவதாக அவ்வப்போது அவரே கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்த சமந்தா திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது சகுந்தலம், யசோதா உள்ளிட்ட படங்களை தொடர்ந்து பாலிவுட்டில் சிட்டாடல் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் சூட்டிங் போது ஒரு சண்டைக்காட்சி அமைந்திருக்கிறது. அப்போது, இயக்குனர் சமந்தாவால் நடிக்க முடியுமா? ரிஸ்க் எடுக்க வேண்டுமா என்று யோசித்துள்ளார்.
தன்னம்பிக்கையுடன் சண்டைக்காட்சியில் நடிக்க முன்வந்து நடிகை சமந்தா நடித்தும் முடித்து இருக்கிறார். இந்த படப்பிடிப்பு காட்சி முடிந்ததும் அப்படியே, நடிகை சமந்தா மயங்கி கீழே விழுந்துள்ளார். பின் படக் குழுவினர் அவருக்கு உடனடி சிகிச்சை கொடுத்ததாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில், நடிகை சமந்தா அளித்த பேட்டி ஒன்று, தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதில், தொகுப்பாளினி நடிகை சமந்தாவிடம் சில நடிகைகள் முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்வார்கள். அதை போல், உங்களுக்கு ஏதாவது விஷயங்கள் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சமந்தா, நான் இப்போ முத்த காட்சியில் நடிக்க மாட்டேன் என்று சொன்னால் உதைப்பார்கள். முதல் படத்திலேயே எல்லாமே பண்ணியாச்சு இப்ப என்ன முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்று சொல்வது எனக் கூறியிருந்தார்.