காஜல் அகர்வாலுக்கு அறிவுரை கூறினாரா சமந்தா.?

Author: Rajesh
1 February 2022, 10:52 am

பொம்மலாட்டம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான காஜல் அகர்வால், அதன்பின் தெலுங்கில் வெளியான மகதீரா மற்றும் தமிழில் நான் மகான் அல்ல போன்ற படங்களில் வெற்றியால் தமிழகத்தில் வளர்ந்து வரும் நடிகையானார். அதன் பிறகு மோதி விளையாடு, சரோஜா போன்ற படங்களில் நடித்து கவனம் பெறாமல் இருந்தார்.

பின் துப்பாக்கி, மாற்றான், மெர்சல், கோமாளி, விவேகம் என முன்னணி ஹீரோக்களின் நடிகையாக மாறினார். தற்போது அவர் கைவசம் இந்தியன் 2, ஹே சினாமிகா மற்றும் தெலுங்கில் ஒரு படமும் உள்ளது.

சமீபத்தில் காதலரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருந்தார். இந்த நிலையில் காஜல் அகர்வால் கர்ப்பம் ஆனதாக அவரும், அவரின் கணவரும் அறிவித்துவிட்டார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது, சோபாவில் கால்களை மடித்து உட்கார்ந்திருக்கும் படியான புகைப்படத்தை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் படத்திற்கு நடிகை சமந்தா கமெண்ட் செய்துள்ளார். ஆனால் அது என்னவென்று தெரியாதபடி காஜல் அவர்வால் மறைத்து வைத்துள்ளார். ஒரு வேளை கர்ப்பமாக இருக்கும் போது இப்படி உட்கார கூடாது என்று அறிவுரை கூறி இருப்பாரோ.?

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?