“என் ஆண்டாள் மச்சா அவ” – சம்முவை பார்த்து உருகி மருகும் ரசிகர்கள்

By: Udayaraman
13 April 2021, 10:56 pm
Quick Share

2010ல் வெளியான “பானா காத்தாடி” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா.”நீதானே என் பொன் வசந்தம்”, “நான் ஈ”, “கத்தி”, “24”, ‘மெர்சல்”, “சூப்பர் டீலக்ஸ்’ போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார். உதட்டு ஆப்ரேஷன் செய்து அழகை மெருகேற்றி கொண்டு வந்த சமந்தா, நீதான் என் பொன்வசந்தம், சூப்பர் டீலக்ஸ்,

24, மெர்சல், அஞ்சான், தெறி போன்ற படங்களில் நடித்து தற்போது வரை கனவுக்கன்னியாக இருந்து வருகிறார். அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் சமந்தா தற்போது உகாதி நாளை முன்னிட்டு சேலை அணிந்து டீசன்டான போஸ் கொடுத்துள்ளார். இந்த மாதிரி பார்த்து ரொம்ப நாள் ஆகி போனதால் ஏக்கத்தில் இருந்த ரசிகர்கள் என் ஆண்டாள் மச்சான் அவ என உருகி வருகின்றனர்.

Views: - 247

4

1