புதிய காதலை உறுதிபடுத்திய சமந்தா? காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படம்;வெளிவந்த குட்டு!
Author: Prasad9 July 2025, 11:21 am
சமந்தாவின் புதிய காதலர்?
தென்னிந்தியாவின் டாப் நடிகையான சமந்தா, தான் பல வருடங்களாக காதலித்து வந்த நாக சைதன்யாவை 2017 ஆம் ஆண்டு கரம் பிடித்தார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக 2021 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில்தான் கடந்த சில மாதங்களாக சமந்தா “தி ஃபேமிலி மேன்” வெப் சீரீஸ் இயக்குனர்களில் ஒருவரான ராஜ் நிடிமொருவை டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.

சமீப காலமாக இருவரும் ஜோடியாக பல விழாக்களில் கலந்துகொள்ளும் புகைப்படங்கள் வெளிவரத் தொடங்கியது. இருவரும் காதலித்து வருவதாக செய்திகள் வலம் வருகின்றன. ஆனால் இது குறித்து சமந்தாவோ அல்லது ராஜ் நிடிமொருவோ இதுவரை வாய் திறக்கவில்லை.
வெளிநாட்டில் டேட்டிங்?
இந்த நிலையில் அமெரிக்காவின் டெட்ராய்டு பகுதியில் சமந்தாவும் ராஜ் நிடிமொருவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமந்தா தனது இன்ஸ்டா பக்கத்தில் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அதில் ராஜ் நிடிமொருவும் சமந்தாவும் ஒருவருக்கொருவர் தோள் மீது கைப்போட்டு நெருக்கமாக நடந்து வரும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
இப்புகைப்படம் இணையத்தில் வைரல் ஆன நிலையில், “அப்போ ரெண்டு பேரும் லவ் பண்றது Confirm-ஆ?” “ஒரு வேளை இருக்குமோ?” போன்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.