சமந்தா- நாக சைதன்யா விவகாரம் – காட்டமாக வேண்டுகோள் விடுத்த நாகார்ஜுனா..!

Author: Rajesh
28 January 2022, 5:26 pm
Samantha -Updatenews360
Quick Share

நடிகை சமந்தாவும், நடிகர் நாகசைதன்யாவும் காதலித்து, கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகும் தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த சமந்தா, பல வெற்றிப்படங்களைக் கொடுத்து வந்தார். இதற்கிடையில் சுமார் 4 ஆண்டுகள் வரை ஒன்றாக சேர்ந்து வாழ்ந்த இருவரும் பிரிகிறோம் என தனித்தனியாக சமூக வலைதளம் மூலம் அறிவித்தனர். இந்தச் செய்தி தென்னிந்திய திரையுலகம் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

இதுகுறித்து, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் பலர், இவர்களது பிரிவுக்கு அவரவர்களுக்கு தெரிந்த தகவல்களைக் கூறி வந்தாலும், எதனால் இவர்கள் பிரிந்தனர் என இருவரும் இதுவரை தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ‘சமந்தாதான் முதலில் விவாகரத்து கோரினார் என இருவரின் பிரிவு குறித்து நாகார்ஜுனா கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதுதொடர்பாக நாகார்ஜுனா தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்துள்ளார். ‘சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை மற்றும் முற்றிலும் முட்டாள்தனம்!! வதந்திகளை செய்தியாக வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஊடக நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்’ இவ்வாறு நாகார்ஜுனா கூறியுள்ளார்.

  • selva நிதின் கட்கரிக்கு ஒரு நியாயம்.. அன்னபூர்ணா சீனிவாசனுக்கு ஒரு நியாயமா : கொந்தளிக்கும் செல்வப்பெருந்தகை!
  • Views: - 2965

    5

    3