சமந்தா – நாக சைதன்யா விவாகரத்துக்கு அமீர்கான்தான் காரணம் : பிரபல நடிகை வெளியிட்ட பகீர் கசமுசா பின்னணி…

Author: Babu Lakshmanan
4 October 2021, 2:21 pm
amir khan -updatenews360
Quick Share

நடிகை சமந்தா – நாக சைதன்யா விவாகரத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தான் காரணம் என்று பிரபல நடிகை பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

பிரபல நடிகையான சமந்தா மற்றும் அவரது கணவரும் விவாகரத்து செய்து கொள்வதாக நேற்று முன்தினம் (அக்.,2) அறிவித்தனர். மேலும், தொடர்ந்து இருவரும் நல்ல நண்பர்களாக தொடரப்போவதாகவும், தங்களுக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர்.

நீண்ட நாட்கள் பல்வேறு வதந்திகள் வெளியான நிலையில், இருவரும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருப்பது அவர்களின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, இருவரின் விவாகரத்திற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதாவது, நடிகை சமந்தா – நாக சைதன்யா விவாகரத்திற்கு பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தான் காரணம் என்று அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது :- தென்னிந்திய நடிகர் ஒருவர் தனது மனைவியை விவகாரத்தில் செய்துள்ளார். அவருக்கு அண்மையில் பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரோ விவகாரத்தில் வல்லுநர். அதுமட்டுமில்லாமல், பெண்கள், குழந்தைகளின் வாழ்க்கையை சீரழித்திருக்கிறார். நான் யாரை சொல்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும்.

Kangana_Ranaut_UpdateNews360 (2)

விவகாரத்து என்றாலே பொதுவாக ஆண்களின் மீதே அதிக தவறுகள் இருக்கும். ஏனெனில், இயற்கையிலேயே ஆண் வேட்டையாடுபவராகவும், பெண் வளர்ப்பராகவும் இருக்கிறார். பெண்களை ஆடை போன்று மாற்றி விட்டு, பிறகு அவர்களுடன் நண்பர்களாக இருக்கிறோம் எனக் கூறுபவர்களிடம் கனிவு காட்டாதீர்கள். ஊடகம் மற்றும் ரசிகர்களிடம் ஊக்கம் பெறும் இவர்கள் வெட்கித் தலைக் குனிய வேண்டும். விவாகரத்து கலாச்சாரம் முன் எப்போதையும் காட்டிலும் வேகமாக வளர்ந்து வருகிறது, எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

பிரபல நடிகரான அமீர்கான் மீது சக நடிகையான கங்கனா ரணாவத் நேரடியாக விமர்சித்திருப்பது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது லால் சிங் சதா என்னும் திரைப்படத்தில் நடிகர் அமீர்கானுடன் நாக சைதன்யா இணைந்து நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 626

0

1