ஒரு வேலை இருக்குமோ…? பிரபல இளம் நடிகருடன் ஒரே தட்டில் சாப்பிட்ட சமந்தா – வைரல் போட்டோ!

Author: Shree
13 June 2023, 8:21 am

அழகிய இளம் நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சமந்தா. தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் இவர் சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். குறிப்பாக சமந்தா படு கவர்ச்சியான ரோல், படுக்கையறை காட்சிகளில் யோசிக்காமல் தாராளமாக நடித்து சர்ச்சை கிளப்பி வருகிறார்.

இந்நிலையில் சமந்தா Citadel என்ற இந்தி வெப் தொடரில் கமிட்டாகி நடித்து வருகிறார். அதில் பிரபல பாலிவுட் இளம் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடிக்கிறார். அவருடன் ஒரே தட்டில் அமர்ந்து சாப்பிடும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என்றால் ஒரு வேலை காதலிப்பார்களோ? என ரசிகர்கள் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது.

  • the reason behind rj balaji changed his name as rjb அந்த நடிகை சொன்ன ஒரே காரணத்தால் தனது பெயரையே மாற்றிக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! இதான் விஷயமா?