சமந்தாவை ஜெயில்ல போடுங்க.. சர்ச்சை பதிவுக்கு குவியும் கண்டனம்..!

Author: Vignesh
5 July 2024, 10:59 am

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா தற்போது பாலிவுட் படங்களில் கூட கவனம் செலுத்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். பவ்யமான தோற்றத்தோடு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி சினிமா உலகில் உச்சத்தை தொட்டவர் நடிகை சமந்தா.

சமந்தா பல்லாவரத்து பொண்ணு என ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபலமாக இருக்கிறார். இவர் மாடலிங் துறைக்கு வருகையில் 500 ரூபாய்க்கு பணிபுரிய தொடங்கி, இப்போது பல கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கும் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இப்போதும், பாலிவுட்டிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இதனிடையே, மயோசிடிஸ் நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட சமந்தா சில நாட்கள் படங்களில் நடிக்காமல் சிகிச்சையில் இருந்தார்.

samantha

இந்நிலையில், நடிகை சமந்தா நெபுலைசர் கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அத்துடன் ஒரு பொதுவான வைரஸுக்கு மருந்து கொள்ளும் ஒரு மாற்று வழியை முயற்சி செய்து பாருங்கள். அதில், ஒரு வழி ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைசர் செய்வது எனக் குறிப்பிட்டுள்ளார்.

சமந்தாவின் இந்த பதிவிற்கு கண்டனம் தெரிவித்து லிவர் டாக் என்ற பெயர் கொண்ட மருத்துவர் ஒருவர் கண்டன பதிவு போட்டுள்ளார். அதில், அவர் சுவாச வைரஸ் தொற்றுகளை தடுக்கவும் சிகிச்சை அளிக்கவும் ஹைட்ரஜன் பெராக்சைடு சுவாசிக்கும்படி சமந்தா பதிவிட்டுள்ளார்.

samantha - updatenews360

அமெரிக்காவின் ஆஸ்துமா மற்றும் அலர்ஜி அறக்கட்டளை நிறுவனம் ஹைட்ரஜன் பெராக்சைடு செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கிறது. ஏனெனில் அது உடல் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. பகுத்தறிவு மற்றும் விஞ்ஞான ரீதியான ஒரு முற்போக்கான சமுதாயத்தின் பொது சுகாதாரத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த பெண்ணிற்கு அபராதமோ அல்லது சிறை தண்டனையோ விக்கப்படும். அவருக்கு உதவியோ அல்லது அவரது குழுவில் சிறந்த ஆலோசகரோ தேவை என கண்டன பதிவு போட்டுள்ளார்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்