முன்னாள் மாமனார் நாகர்ஜூனாவுடன் சமந்தா திடீர் சந்திப்பு? அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடந்தது என்ன?

Author: Udayachandran RadhaKrishnan
27 November 2021, 6:47 pm
Samantha Nagarjuna -Updatenews360
Quick Share

மாஸ்கோவின் காவேரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் சமந்தா. பாணா காத்தாடி, நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24, மெர்சல், சூப்பர் டீலக்ஸ் போன்ற படங்களின் மூலம் பக்கத்து வீட்டு பெண் போல நடித்து இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார்.

தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்நிலையில், தற்போது சம்மு குட்டி விஜய்சேதுபதியுடன், “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன், இருவரும் தன்னுடைய விவாகரத்தை அறிவித்தனர்.

தற்போது DIVORCE ஆன பிறகு, ஆன்மீக Trip சென்ற சமந்தா. அதன் பிறகு வெளிநாட்டில் ஒரு Trip அடித்துள்ளார். விவாகரத்து ஆனதிலிருந்து விபரீதமா போஸ் கொடுத்து வரும் சமந்தா, தமிழில் கௌதம் மேனம் இயக்கத்தில் வெளியான விண்ணை தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தார்.

2009ஆம் ஆண்டு ye maya cheasave என்ற பெயரில் வெளியான படத்தில் சமந்தா மற்றும் அவரது முன்னாள் கணவரும் நடிகருமான நாக சைதன்யாவுடன் நடித்த போது டப்பிங் பேசும் போது எவ்வளவு படபடப்பு இருந்ததோ அதே போல் தற்போதும் உள்ளது என ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார்.

சர்வதேச படத்தில் முதன்முறையாக சமந்தா நடிக்க உள்ளார். அதுவும் இயக்குநர் Philip John உடன் இணைகிறார். ARRANGEMENTS OF LOVE என்ற நாவலை தழுவி உருவாக உள்ளது.

இந்த நிலையில் தனது முன்னாள் கணவர் நாக சைதன்யாவின் தந்தை நாகர்ஜூனாவுக்கு சொந்தமான ஸ்டூடியோவுக்கு சமந்தா சென்றதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதையடுத்து என்னவாக இருக்கும் என விசாரித்த போது, ’சாகுந்தலம்’ படத்தின் டப்பிங் பணிகள் அங்கு நடந்து வருவதால், அவர் அங்கு சென்றதாக சமந்தாவுக்கு வேண்டியவர்கள் தெரிவித்துள்ளனர்.

Views: - 262

3

2