27 ஆண்டுகளுக்கு முன்பே ஓரின உறவு…. வீடியோவுடன் பதிவிட்ட வைரமுத்து!

Author: Shree
31 October 2023, 5:04 pm

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா துறையில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.

vairamuthu

இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் வருகின்றனர். தொடர்ந்து சின்மயில் அவரை விமர்சித்து தான் வருகிறார். ஆனால், வைரமுத்து அதையெல்லாம் பெரிதுபடுத்திக்கொள்வதில்லை.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், வைரமுத்து 27 ஆண்டுகளுக்கு முன்பே ஓரின உறவு பற்றி இந்தியன் படத்தின் “டெலிபோன் மணிபோல்” பாடலில் வரிகள் எழுதியுள்ளார். இது குறித்து பதிவிட்டுள்ள அவர்,

92 ஆண்டு
வரலாறு கொண்ட திரைப்பாட்டு
அன்பின் ஐந்திணையாகிய
காதலைப் பாடியிருக்கிறது

ஒருதலைக் காதலாகிய
கைக்கிளையை –
பொருந்தாக் காமமாகிய
பெருந்திணையைப்
பாடியிருக்கிறது

ஆனால்,
இன்று பெரிதும் பேசப்படும்
தன்பாலின உறவை
27 ஆண்டுகளுக்கு முன்பே
இந்தியன் படத்தில்
முதன் முதலாக
எழுதியிருக்கிறேன்

ஆஸ்திரேலியா படப்பிடிப்பில்
கமலும் ஷங்கரும் இதுகுறித்து
ஜாடையாக விவாதித்துப் புன்னகையோடு கடந்துவிட்டார்களாம்
அது எந்தவரி தெரியுமா?

என கூறி பாடல் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?