சேலை கட்டி நெற்றியில் குங்குமம்….சனம் ஷெட்டி ரகசிய திருமணமா?

31 January 2021, 7:23 pm
Quick Share

நெற்றியில் குங்குமம் இருப்பதைக் கண்டு தனக்கு திருமணம் ஆனதாக வெளியான தகவல் குறித்து நடிகை சனம் ஷெட்டி தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

அம்புலி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சனம் ஷெட்டி. இந்தப் படத்தைத் தொடர்ந்து, மாயாவி, தொட்டால் விடாது, விலாசம், கதம் கதம், கலை வேந்தன், வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான், சவாரி, தகடு, சதுரம் 2, டிக்கெட், வால்டர் என்று பல படங்களில் நடித்துள்ளார். எனினும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார்.

ஆனால், இறுதி வரை செல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 63ஆவது நாளில் மக்களால் வெளியேற்றப்பட்டார். சனம் ஷெட்டி மற்றும் பிக்பாஸ் 3 போட்டியாளரான தர்ஷனும் காதலித்து வந்தனர். இருவரும் திருமணமும் செய்து கொள்ள இருந்தனர். ஆனால், நிச்சயதார்த்தம் நடந்த பிறகு தர்ஷன் தன்னை ஏமாற்றிவிட்டதாக சனம் ஷெட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த நிலையில், சனம் ஷெட்டி எப்போதெல்லாம் சேலையில் வருகிறாரோ அப்போதெல்லாம், நெற்றி வகிடில் குங்கும் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்படியிருக்கும் போது, சனம் ஷெட்டிக்கு ரகசியமாக திருமணம் நடந்துள்ளதாக செய்தி வெளியாகி வந்துள்ளது. தற்போது, அதற்கு விளக்கம் கொடுக்கும் வகையில், ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார். எனக்கு இப்போது வரை திருமணம் நடக்கவில்லை. ஆனால், திருமணம் நடந்தால், உங்கள் அனைவரது ஆசீர்வாதத்துடன் தான் நடக்கும். எங்கள் வீட்டில் திருமணமான பெண்கள் மட்டுமல்லாமல், மற்ற பெண்களும் நெற்றி வகிடில் குங்குமம் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதைத் தான் நானும் பின்பற்றி வருகிறேன் என்று கூறி, தனக்கு திருமணமான செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Views: - 22

0

0