50 பேரின் ஆணுறுப்பை வெட்டி வீசணும்….. நடிகை சனம் ஷெட்டி கொந்தளிப்பு!

Author:
1 September 2024, 6:13 pm

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் கிட்டத்தட்ட 50 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இச்சம்பவத்தை அடுத்து பெண்களுக்கு பாதுகாப்பு தரவேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல்கள் பற்றி பல பேர் பொதுவெளியில் வந்து வெளிப்படையாக தங்களது கருத்துக்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பிரபல நடிகையான சனம் செட்டி தனியார் அமைப்புடன் இணைந்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் அந்தப் போராட்டத்தின் போது பேசிய நடிகை சனம் செட்டி… நான் நடிகை என்பதால் வெறும் பொழுதுபோக்கு சம்பந்தமான பதிவுகளை மட்டும் சமூக வலைத்தளங்களில் பதிவிட சொல்கிறார்கள் .

இந்த சமூகத்தில் தான் நானும் வாழ்கிறேன். நாளைக்கு என்னுடைய வீட்டில் கூட இது போன்ற விஷயங்கள் நடந்தால் அப்போதும் எப்படி பொழுது போக்குக்காக பதிவுகளை பகிர முடியும்? இதனால் சினிமா வாய்ப்புகள் போனால் கூட போகட்டும் பரவாயில்லை… எது போனாலும் நான் பேசுவேன்.

கல்கத்தா மருத்துவமனையில் ஒரு டாக்டருக்கு நடந்தது நாளைக்கு எனக்கு நடக்காது என்று என்ன நிச்சயம்? என்ன கியாரண்டி ? யார் கியாரண்டி கொடுப்பார்கள்? ஹேமா அறிக்கை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சொந்த அப்பாவே அவரது குழந்தையை பாலியல் துன்புறுத்தல் செய்யும் சமூகத்தில் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதில் எங்கே பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது? அதனால் இப்போது இருக்கும் தண்டனை போதாது பாலில் துன்புறுத்தல் செய்பவர்களின் ஆணுறுப்பை அறுத்து போடவேண்டும்.

அதை பார்த்து யாருக்கும் அந்த ஒரு சிந்தனை கூட வரவே கூடாது. ஆணுறுப்பை வெட்டி வீசினால் தான் பெண்களுக்கு பெண்களுக்கு எதிரான வன்முறைகளை அறவே ஒழிக்க முடியும். நம் நாட்டில் பெண்களுக்கு பாலியல் தொந்தரவுகள் இருக்காது என்பதை உறுதி செய்ய முடியுமா?

நீதிமன்றம் காவல்துறை சட்டம் எல்லாம் எதற்கு? தமிழ்நாட்டில் 6 முதல் 10 வரை உள்ள குழந்தைகளுக்கு கூட பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒருத்தனுக்கு நாம கொடுக்கிற தண்டனையை பார்த்து இன்னொருத்தர் யாருக்கும் அதுபோன்ற சிந்தனை கூட மனதில் வரக்கூடாத அளவுக்கு நாம் அதை ஏற்படுத்த வேண்டும் என மிகுந்த ஆவேசத்தோடு நடிகை சனம் ஷெட்டி பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சுக்கு பலரும் பாராட்டுகளை குவித்து வருகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!